இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு (2025) தமது சொந்த மண்ணில் வைத்து தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்களில் ஆடவிருக்கின்றது.
>>தென்னாபிரிக்க பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்த ரோப் வோல்டர்
அதன்படி இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருப்பதோடு, தென்னாபிரிக்காவுடன் மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கவிருக்கின்றது.
மேற்கிந்திய தீவுகள் உடனான இந்தியாவின் டெஸ்ட் தொடரானது ஒக்டோபர் மாத இடைவெளியில் ஆரம்பமாகுவதோடு, அதன் பின்னர் நவம்பர் மாத இடைவெளியில் தென்னாபிரிக்க அணியுடனான கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுகின்றன.
அடுத்த ஆண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவிருப்பதன் காரணமாக இதற்கு தயராகும் பொருட்டு தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேற்கிந்திய தீவுகள் தொடர்
முதல் டெஸ்ட் – ஒக்டோபர் 2-6 – அஹமதாபாத்
இரண்டாவது டெஸ்ட் – ஒக்டோபர் 10-14 – கொல்கத்தா
தென்னாபிரிக்கா தொடர்
முதல் டெஸ்ட் – நவம்பர் 14-18 – டெல்லி
இரண்டாவது டெஸ்ட் – நவம்பர் 22-26 – குவஹாத்தி
முதல் ஒருநாள் போட்டி – நவம்பர் 30 – ரான்ச்சி
இரண்டாவது ஒருநாள் போட்டி – டிசம்பர் 3 – ராய்பூர்
மூன்றாவது ஒருநாள் போட்டி – டிசம்பர் 6 – வைஷாக்
முதல் T20I – டிசம்பர் 9 – கட்டாக்
இரண்டாவது T20I – டிசம்பர் 11 – சண்டிகார்
மூன்றாவது T20I – டிசம்பர் 14 – தராம்சலா
நான்காவது T20I – டிசம்பர் 17 – லக்னோவ்
ஐந்தாவது T20I – டிசம்பர் 19 – அஹமதாபாத்