பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற குஜராத், பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள்

Indian Premier League 2025

11

இந்தியாவில் நடைபெற்றுவரும் IPL தொடரின் பிளே-ஓஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகள் தகுதிபெற்றுள்ளன. 

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய (18) போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றதன் ஊடாக புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து பிளே-ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்தது. 

ஆஸி. கழகத்தில் கௌஷால் சில்வாவுக்கு முக்கிய பதவி 

அதேநேரம் இந்த வெற்றியின் காரணமாக தலா 17 புள்ளிகளை பெற்றிருந்த பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளும் பிளே-ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பினை பெற்றுள்ளன 

இவ்வாறு மூன்று அணிகள் பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் எஞ்சியிருக்கும் ஒரு இடத்துக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. 

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளை பெற்றுள்ளதுடன் மிகுதி உள்ள 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் இலகுவாக பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெறும். அதேநேரம் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி தங்களுக்கு மிகுதி உள்ள 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியும். 

எனினும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியொன்று எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் குறித்த போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். 

இதேவேளை லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணிக்கு மிகுதியாக எஞ்சியிருக்கும் 3 போட்டிகளையும் வெற்றிக்கொண்டு, டெல்லி மற்றும் மும்பை அணிகள் தலா ஒவ்வொரு போட்டிகளில் தோல்வியடைந்தால் லக்னோவ் அணிக்கும் பிளே-ஓஃப் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<