பயிற்சியாளரின் பதவிக் காலத்தினை நீடிக்கும் நியூசிலாந்து கிரிக்கெட்

149

எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி ஸ்டேட் செயற்படுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

லக்னோவ் அணியுடன் இணைவாரா ஜஸ்டின் லேங்கர்?

தற்போதை நியூசிலாந்து தலைமைப் பயிற்சியாளரான கேரி ஸ்டேட் இந்த ஆண்டின் ஒருநாள் உலகக் கிண்ணம் வரை மாத்திரமே அவ்வணியை பயிற்றுவிப்பார் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் அடுத்தடுத்த ஆண்டுகளில் T20 உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் (ஒருநாள் தொடர்) போன்ற முன்னணி தொடர்கள் நடைபெறவிருப்பதனை கருத்திற் கொண்டு கேரி ஸ்டேட்டின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது. 

51 வயது நிரம்பிய கேரி ஸ்டேட் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகின்றார். கடந்த 2018ஆம் ஆண்டு மைக் ஹேய்சனின் இடம் இருந்து கேரி ஸ்டேட் நியூசிலாந்தின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பின்னர் நியூசிலாந்து அணி 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவானதோடு, அதன் பின்னர் 2021ஆம் ஆண்டின் T20 உலகக் கிண்ணத் தொடரிலும் சிறந்த பதிவினைக் காட்டியிருந்தது. 

பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சிப்போட்டியில் மொஹமட் சிராஸ்

இன்னும் முதன் முறையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த .சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் கேரி ஸ்டேட் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு தொடர்ச்சியாக கேரி ஸ்டேட் வெளிப்படுத்திய சிறந்த பதிவுகளே அவர் 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை நியூசிலாந்தின் தலைமைப் பயிற்சியாளராக நீடிக்க காரணமாகின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<