இம்முறையும் ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக ஸ்டோக்ஸ்

6229
IPL Auction 2018

கோடைகாலத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும், இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் (IPL) தொடரின் பதினொராவது பருவகாலத்திற்கான போட்டிகள்  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகின்றது. [rev_slider LOLC]

18 இலங்கை வீரர்களுக்கே ஐ.பி.எல் இறுதி ஏலத்திற்கு வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்டு வருகின்ற ஐ.பி.எல்..

இதற்காக வீரர்களை தெரிவு செய்யும், வீரர்கள் ஏலம் கடந்த சனிக்கிழமையும் (27), ஞாயிற்றுக்கிழமையும் (28) பெங்களூரில் நடைபெற்று முடிந்திருக்கின்றது.

இம்முறைக்கான இறுதி ஏலத்தில் இந்தியாவோடு சேர்த்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 578 வீரர்கள் பங்குபற்றியிருந்ததோடு, இதிலிருந்து 169 வீரர்கள் எட்டு அணிகளினாலும் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் 113 வீரர்கள் இந்தியர்கள் என்பதோடு, 56 வீரர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறைக்கான ஏலத்தில் எட்டு அணிகளும் தங்களுக்குரிய வீரர்களை வாங்குவதற்காக இந்திய நாணய மதிப்பின்படி 431.7 கோடி ரூபாய் பணத்தினை செலவிட்டிருக்கின்றன. இதில் அதிக பணம் செலவிட்ட அணியாக 80 கோடி ரூபாவை செலவு செய்து 19 வீரர்களை வாங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் குறைந்தளவு பணம் செலவிட்ட அணியாக 73.5 கோடி ரூபாய்களை செலவழித்து 25 வீரர்களை வாங்கிய  சென்னை சுபர் கிங்ஸ் அணியும் இருக்கின்றன.

உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணி பிளேட் சம்பியன்

ஹசித்த போயகொடவின் மற்றொரு அபார சதத்தின்..

ஏலத்தின் முதல் நாளில் (27) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினரால் 12.5 கோடி ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்ட இங்கிலாந்தின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் இம்முறைக்கான ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக பதிவாகியிருந்தார். அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய்  நிர்ணயம் செய்யப்பட்டிருந்த ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்திலும் அதிக விலைக்கு (14.5 கோடி ரூபா) வாங்கப்பட்ட வீரராக காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்கள் சார்பாக அதிகவிலை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் இருக்கின்றார். இவரை ஏலத்தின் இரண்டாம் நாளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 11.5 கோடி ரூபாய் விலைக்கு வாங்கியிருந்தது.  

இவர்கள் தவிர 10 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட ஏனைய வீரர்களாக இந்திய அணியின்  துடுப்பாட்ட நட்சத்திரங்களான மனீஷ் பாண்டே மற்றும் லோக்கேஷ் ராகுல் ஆகிய இருவரும் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டனர். இரண்டு வீரர்களும் தலா 11 கோடி ரூபாய் வீதம் வாங்கப்பட்டிருந்தனர். இதில் ராகுலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மனீஷ் பாண்டேவை சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியும் தமக்கு சொந்தமாக்கி கொண்டிருந்தன.

வெளிநாட்டு வீரர்களில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்களில் இரண்டாம் இடத்தினை அவுஸ்திரேலியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் லின் பெற்றுக் கொண்டார். இவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9.6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தது.

ஆப்கானிஸ்தானின் சுழல் வீரரான ராஷித் கானை சன் ரைஸர்ஸ் அணி 9 கோடி ரூபாய் கொடுத்து தமது அணியில் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் ராஷித் கான் ஐ.சி.சி இன் அங்கத்துவ நாடுகளில் இருந்து அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக மாறியிருந்தார்.

இதேபோன்று ஐ.சி.சி. இன் ஏனைய அங்கத்துவ நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் இருந்து சந்தீப் லமிச்சானேக்கும் ஐ.பி.எல். தொடரில் முதல் தடவையாக விளையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. சுழல் வீரரான லமிச்சானவை டெல்லி டெயார்டெவில்ஸ் அணி 20 இலட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கின்றது.  

இம்முறைக்கான ஐ.பி.எல் தொடரில் அதிக வெளிநாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்ட நாடாக அவுஸ்திரேலியா இருக்கின்றது. மொத்தமாக அந்நாட்டில் இருந்து 17 வீரர்கள் இந்தப் பருவகாலத்திற்கான தொடருக்கு அணிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளில் இருந்து தலா 8 வீரர்களும், நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளிலிருந்து தலா 7 வீரர்களும், ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து 4 வீரர்களும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளிலிருந்து தலா 2 வீரர்கள் வீதமும், நேபாளத்தில் இருந்து ஒரு வீரரும் மொத்தமாக இந்த ஏலத்தில் வாங்கப்பட்டிருக்கின்றனர்.

ஹத்துருசிங்க மீதான நம்பிக்கை வீண் போகவில்லை – சந்திமால்

தொடர் தோல்விகள் மற்றும் உபாதைகள் என இக்கட்டான..

T20 போட்டிகளுக்கான விஷேட பந்துவீச்சாளர்களில் ஒருவரான இலங்கையின் லசித் மாலிங்க இந்த ஏலத்தில் எந்த அணிகளினாலும் கொள்வனவு செய்யப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முந்திய பருவகாலங்களில் விளையாடிய மாலிங்க இதுவரை நடந்திருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை சாய்த்தவர் என்பது (154) குறிப்பிடத்தக்கது. எனினும் இலங்கை சார்பாக பந்துவீச்சாளர்களான அகில தனஞ்சய மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 50 இலட்ச ரூபாய் வீதம் செலவழித்து இந்த ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தனர். இதில் தனஞ்சயவை மும்பை இந்தியன்ஸ் அணியும், சமீரவை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் கொள்வனவு செய்திருந்தன.  

இதேவேளை அதிரடி துடுப்பாட்ட வீரரான மேற்கிந்திய தீவுகளின் கிரிஸ் கெயிலும் எந்த அணிகளாலும் ஏலத்தின் இரண்டு நாட்களிலும் கவனத்திற்கொள்ளப்படாத நிலையில் இறுதித்தருவாயில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினால் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் அணிகளின் நட்சத்திர வீரர்களாக காணப்படும் ஹஷிம் அம்லா, ஜோ ரூட், டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இந்த ஏலத்தில் கொள்முதல் செய்யப்படாத எனைய வீரர்களாக காணப்பட்டிருந்தனர்.  

இந்தப்பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் அணிகளால் கொள்முதல் செய்யப்பட்ட வீரர்கள் முழு விபரம்

சென்னை சுபர் கிங்ஸ்:
சாய்டான்யா பிஸ்னோய் – ரூபா. 20 இலட்சம்
மோனு குமார் – ரூபா. 20 இலட்சம்
சிடிஸ் சர்மா – ரூபா. 20 இலட்சம்
மார்க் வூட் – ரூபா. 1.5 கோடி
சேம் பில்லிங்ஸ் – ரூபா 1 கோடி
முரளி விஜய் – ரூபா. 1 கோடி
துருவ் சோரெய் – ரூபா. 20 இலட்சம்
கனிஷ்க் சேத் – ரூபா. 50 இலட்சம்
K.M. ஆஷிப் – ரூபா. 40 இலட்சம்
தீபக் சாஹர் – ரூபா. 80 இலட்சம்
மிச்சேல் சான்டர் – ரூபா. 50 இலட்சம்
N. ஜகதீஷன் – ரூபா. 20 இலட்சம்
சர்துல் தாஹூர் – ரூபா. 2.6 கோடி
கர்ன் சர்மா – ரூபா. 5 கோடி
அம்பத்தி ராயுடு – ரூபா. 2.2 கோடி
கேதர் ஜாதவ் – ரூபா. 7.8 கோடி
ஷேன் வொட்சன் – ரூபா. 4 கோடி
டுவெய்ன் பிரவோ – ரூபா. 6.40 கோடி
ஹர்பஜன் சிங் – ரூபா. 2 கோடி
பாப் டூ பிளேசிஸ் – ரூபா. 1.60 கோடி

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்
பவான் தேஷ்பாண்டே – ரூபா. 20 இலட்சம்
டிம் செளத்தி – ரூபா. 1 கோடி
பார்திவ் பட்டேல் – ரூபா. 1.7 கோடி
அனிருதா ஜோஸி – ரூபா. 20 இலட்சம்
நதன் கோல்ட்டர் நைல் – ரூபா. 2.2 கோடி
மொஹமட் சிராஜ் – ரூபா. 2.6 கோடி
பவான் நெகி – ரூபா. 1 கோடி
வாஷிங்டன் சுந்தர் – ரூபா. 3.2 கோடி
மந்தீப் சிங் – ரூபா. 1.4 கோடி
முருகன் அஷ்வின் – ரூபா. 2.2 கோடி
நவ்தீப் சைனி – ரூபா. 3 கோடி
அனிகெட் செளத்ரி – ரூபா. 30 இலட்சம்
குல்வந்த் கெஜிரோலியா – ரூபா. 85 இலட்சம்
மனன் வோஹ்ரா – ரூபா. 1.1 கோடி
யுஸ்வேந்திர சாஹல் – ரூபா. 6 கோடி
உமேஷ் யாதவ் – ரூபா. 4.2 கோடி
குயின்டன் டீ கொக் – ரூபா. 1.7 கோடி
மொயின் அலி – ரூபா. 1.7 கோடி
கொலின் டி கிரான்ட்ஹோமே – ரூபா. 2.2 கோடி
கிரிஸ் வோக்ஸ் – ரூபா. 7.40 கோடி
ப்ரென்டன் மெக்கலம் – ரூபா. 3.60 கோடி

டெல்லி டெயார்டெவில்ஸ்
சயான் கோஷ் – ரூபா. 20 இலட்சம்
நாமன் ஓஜா – ரூபா. 1.40 கோடி
சந்தீப் லமிச்சனே – ரூபா. 20 இலட்சம்
அபிஷேக் சர்மா – ரூபா. 55 இலட்சம்
மன்ஜோட் கல்ரா – ரூபா. 20 இலட்சம்
ட்ரென்ட் போல்ட் – ரூபா. 2.2 கோடி
குர்கீரத் சிங் மான் – ரூபா. 75 இலட்சம்
டேனியல் கிரிஸ்டியன் – ரூபா. 1.5 கோடி
சபாஷ் நதீம் – ரூபா. 3.2 கோடி
அவேஸ் கான் – ரூபா. 70 இலட்சம்
ஹர்ஷல் பட்டேல் – ரூபா. 20 இலட்சம்
விஜய் சங்கர் – ரூபா. 3.20 கோடி
ராகுல் தெவடியா – ரூபா. 3 கோடி
அமித் மிஷ்ரா – ரூபா. 4 கோடி
ககிசோ றபடா – ரூபா. 4.2 கோடி
மொஹமட் சமி – ரூபா. 3 கோடி
கொலின் முன்ரோ – ரூபா. 1.9 கோடி
ஜேசன் ரோய் – ரூபா. 1.5 கோடி
கெளதம் கம்பீர் – ரூபா. 2.8 கோடி
கிளென் மெக்ஸ்வெல் – ரூபா. 9 கோடி

மும்பை இந்தியன்ஸ்
MD. நிதேஷ் – ரூபா. 20 இலட்சம்
மொஹ்சின் கான் – ரூபா. 20 இலட்சம்
அனுக்குல் சுதாகர் ரோய் – ரூபா. 50 இலட்சம்
அகில தனஞ்சய – ரூபா. 50 இலட்சம்
மயாங் மார்க்கன்டே – ரூபா. 20 இலட்சம்
அதித்யா டானே – ரூபா. 20 இலட்சம்
சிதேஷ் லாட் – ரூபா. 20 இலட்சம்
சரட் லும்பா – ரூபா. 20 இலட்சம்
T.N. தில்லோன் – ரூபா. 55 இலட்சம்
ஜேசன் பெஹ்ரென்ட்ரோப் – ரூபா. 1.5 கோடி
ஜோன் போல் டுமினி – ரூபா. 1 கோடி
ப்ரதீப் சங்வன் – ரூபா. 1.5 கோடி
பென் கட்டிங் – ரூபா. 2.2 கோடி
செளரப் திவாரி – ரூபா. 80 இலட்சம்
எவின் லூயிஸ் – ரூபா. 3.8 கோடி
ராகுல் சாஹர் – ரூபா. 1.9 கோடி
இஷான் கிஷான் – ரூபா. 6.2 கோடி
குர்னல் பாண்டியா – ரூபா. 8.8 கோடி
பெட் கம்மின்ஸ் – ரூபா. 5.4 கோடி
சூர்யகுமார் யாதவ் – ரூபா. 3.2 கோடி
முஸ்தபிசுர் ரஹ்மான் – ரூபா. 2.2 கோடி
கெய்ரன் பொலர்ட் – ரூபா. 5.4 கோடி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
ஜேவன் சீர்லெஸ் – ரூபா. 30 இலட்சம்
மிச்செல் ஜோன்சன் – ரூபா. 2 கோடி
கெமரன் டெல்போர்ட் – ரூபா. 30 இலட்சம்
சிவம் மாவி – ரூபா. 3 கோடி
ரிங்கு சிங் – ரூபா. 80 இலட்சம்
அபூர்வ் வங்கடே – ரூபா. 20 இலட்சம்
வினய் குமார் – ரூபா. 1 கோடி
நிதிஷ் ரானா – ரூபா. 3.4 கோடி
கம்லேஷ் நாகர்கோட்டி – ரூபா. 3.2 கோடி
இஷான் ஜக்கி – ரூபா. 20 இலட்சம்
சுப்மான் கில் – ரூபா. 1.8 கோடி
குல்தீப் யாதவ் – ரூபா. 5.8 கோடி
பியூஷ் சாவ்லா – ரூபா. 4.2 கோடி
ரொபின் உத்தப்பா – ரூபா. 6.4 கோடி
தினேஷ் கார்த்திக் – ரூபா. 7.4 கோடி
கிரிஸ் லின் – ரூபா. 9.6 கோடி
மிச்சேல் ஸ்டார்க் – ரூபா. 9.4 கோடி

ராஜஸ்தான் ரோயல்ஸ்
துஷ்மந்த சமீர – ரூபா. 50 இலட்சம்
ஜடின் சக்ஷேனா – ரூபா. 20 இலட்சம்
அர்யமான் பிர்லா – ரூபா. 20 இலட்சம்
மஹிபால் லோம்ரோர் – ரூபா. 20 இலட்சம்
பென் லாக்லின் – ரூபா. 50 இலட்சம்
S. மிதுன் – ரூபா. 20 இலட்சம்
பிரசாந்த் சோப்ரா – ரூபா. 20 இலட்சம்
ஸ்ரேயாஸ் கோபால் – ரூபா. 20 இலட்சம்
சகிர் கான் – ரூபா. 60 இலட்சம்
அனுரீட் சிங் – ரூபா. 30 இலட்சம்
அங்கிட் சர்மா – ரூபா. 20 இலட்சம்
ஜய்தேவ் உனட்கட் – ரூபா. 11.5 கோடி
டவால் குல்கர்னி – ரூபா. 75 இலட்சம்
கிரிஷ்னப்பா கோவ்தம் – ரூபா. 6.2 கோடி
ஜொப்ரா ஆச்சர் – ரூபா. 7.2 கோடி
D. ஆர்சி சோர்ட் – ரூபா. 4 கோடி
ராகுல் த்ரிபதி – ரூபா. 3.4 கோடி
ஜோஸ் பட்லர் – ரூபா. 4.4 கோடி
சஞ்சு சாம்சன் – ரூபா. 8 கோடி
ஸ்டுவார்ட் பின்னி – ரூபா. 50 இலட்சம்
அஜிங்கியா ரஹானே – ரூபா. 4 கோடி
பென் ஸ்டோக்ஸ் – ரூபா. 12.5 கோடி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்
மன்சூர் டார் – ரூபா. 20 இலட்சம்
கிரிஸ் கெய்ல் – ரூபா. 2 கோடி
மயாங் டாகர் – ரூபா. 20 இலட்சம்
ப்ரதீப் சாஹூ – ரூபா. 20 இலட்சம்
பென் வார்சூயிஸ் – ரூபா. 1.4 கோடி
அன்ட்ரு டை – ரூபா. 7.2 கோடி
பரிந்தார் ஷரான் – ரூபா. 2.2 கோடி
முஜீப் சத்ரான் – ரூபா. 4 கோடி
மோஹித் சர்மா – ரூபா. 2.4 கோடி
மனோஜ் திவாரி – ரூபா. 1 கோடி
அங்கிட் ராஜ்பூட் – ரூபா. 3 கோடி
மயங்க் அகர்வால் – ரூபா. 1 கோடி
மார்கஸ் ஸ்டோனிஸ் – ரூபா. 6.2 கோடி
ஆரோன் பின்ச் – ரூபா. 6.2 கோடி
டேவிட் மில்லர் – ரூபா. 3 கோடி
லோக்கேஷ் ராகுல் – ரூபா. 11 கோடி
கருண் நாயர் – ரூபா. 5.6 கோடி
யுவ்ராஜ் சிங் – ரூபா. 2 கோடி
ரவிச்சந்திரன் அஷ்வின் – ரூபா. 7.6 கோடி

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்
மெஹ்தி ஹஸன் – ரூபா. 20 இலட்சம்
பிபுல் சர்மா – ரூபா. 20 இலட்சம்
ஸ்ரீவாட்ஷ் கோஸ்வாமி – ரூபா. 1 கோடி
தன்மய் அகர்வால் – ரூபா. 20 இலட்சம்
பில்லி ஸ்டன்லேக் – ரூபா. 50 இலட்சம்
கிரிஸ் ஜோர்டான் – ரூபா. 1 கோடி
சச்சின் பேபி – ரூபா. 20 இலட்சம்
சந்தீப் சர்மா – ரூபா. 3 கோடி
மொஹமட் நபி – ரூபா. 1 கோடி
கலீல் அஹ்மட் – ரூபா. 3 கோடி
பாசில் தம்பி – ரூபா. 95 இலட்சம்
T. நடராஜன் – ரூபா. 40 இலட்சம்
சித்தார்த் கெளல் – ரூபா. 3.8 கோடி
தீபக் ஹூடா – ரூபா. 3.6 கோடி
ரிக்கி புய் – ரூபா. 20 இலட்சம்
ராஷித் கான் – ரூபா. 9 கோடி
ரித்திமான் சஹா – ரூபா. 5 கோடி
யூசுப் பதான் – ரூபா. 1.9 கோடி
கார்லோஸ் பரத்வைட் – ரூபா. 2 கோடி
மனீஷ் பாண்டே – ரூபா. 11 கோடி
கேன் வில்லியம்சன் – ரூபா. 3 கோடி
சகிப் அல் ஹஸன் – ரூபா. 2 கோடி
சிக்கர் தவான் – ரூபாய். 5.2 கோடி