பிரான்ஸ் தமிழ் உதைப்பந்தாட்ட சம்மேளனம் கடந்த இரு தினங்களாக (செப்டம்பர் 30, ஒக்டோபர் 01) நடாத்திய வட மாகாண ரீதியான அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென் நிக்கிலஸ் அணியினர் சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளனர்.  

Read-  முதல் சுற்று முடிவுகள்

முதலாவது அரையிறுதி 

இரண்டாவது சுற்றில் குழு A இன் முதலாவது அணியான குருநகர் பாடும்மீன் அணியையும், பரபரப்பான காலிறுதிப் போட்டியில், இரண்டாவது சுற்றில் கிளிநொச்சி யுனைடட் அணியினை வெற்றிபெற்றிருந்த பலமான துறையூர் ஐயனார் அணியினரை பெனால்டி மூலம் வெற்றிபெற்ற இளவாலை யங்ஹென்றீஸ் அணியினர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

மறுமுனையில், யோசப்வாஸ் நகர் ஜக்கிய அணியை இரண்டாவது சுற்றில் வெற்றி கொண்ட சென் நிக்கிலஸ் அணியினர், “E” குழுவின் முதலாவது அணியான நவிண்டில் கலைமதி அணியினரை வெற்றிபெற்ற ஜெகா மீட்பர் அணியினரை காலிறுதியில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தனர்.

முன்னணி வீரர்களின்றி களமிறங்கியிருந்த யங்ஹென்றீசியன்ஸ் அணியினருக்கு சென் நிக்கிலஸ் அணியின் முன்கள வீரர்களான அமிலன், சுரேஷ், றொக்சன் ஆகியோர் பலத்த அழுத்தம் கொடுத்தனர். பின்களத்திலும் ஜெயராஜ் ஹென்றீஸின் தனேஷ், மகிபன் ஆகியோரது முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

இறுதியில் 02-00 என்ற கோல்கள் கணக்கில் யங் ஹென்றீசியன்ஸ் அணியினை வெற்றிகொண்ட நாவாந்துறை சென். நிக்கிலஸ் அணியினர் சுமார் மூன்றரை வருடங்களின் பின்னர் ஒரு தொடரில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

இரண்டாவது அரையிறுதி  

குழு Bஇன் முதலாவது அணியான ஞானமுருகன் அணி இரண்டாவது சுற்றில் புங்குடுதீவு நசேரத் அணியினையும் காலிறுதியில் மான்னாரின் முன்னணி அணிகளுள் ஒன்றான கில்லறி அணிக்கு அதிர்ச்சியளித்திருந்த யங் கம்பன்ஸ் அணியினையும் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஒரு நாள் தொடர்களில் சிறப்பான பெறிதிகளை வெளிப்படுத்திவரும் அணியான மன்னார் சென். லூசியா வீரர்கள், இரண்டாவது சுற்றில் பாஷையூர் சென். அன்ரனிஸ் அணியினையும், காலிறுதியில் இரண்டாவது சுற்றில் மெலிஞ்சிமுனை இருதயராஜா அணியினை எதிர்கொண்டிருந்த வதிரி டைமன்ட்ஸ் அணியினையும் வெற்றிகொண்டு அரையிறுதிக்குள் நுழைந்தனர்.

ஆட்டத்தின் முதல் கோலினை சென். லூசியா அணியினர் பெற்றிருந்தவேளை, தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி ஞானமுருகன் அணியினர் கோல் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள, ஆட்டநேர நிறைவில் போட்டி 01-01 என சமநிலையடைந்தது.

அதன் பின்னர் இடம்பெற்ற பெனால்டி உதையில் 03-01 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தமது இடத்தை உறுதிசெய்தது ஞானமுருகன்.

இறுதிப்போட்டி 

மைதானம் முழுவதும் நிறைந்த இரசிகர்களுக்கு மத்தியில் மின்னொளியில் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் நாவாந்துறை சென்.நிக்கிலஸ் மற்றும் மயிலங்காடு ஞானமுருகன் அணிகள் களங்கண்டிருந்தன.

இரு அணியினரும் தமது முதல் கோலிற்கான முயற்சியினை கடுமையாக மேற்கொண்டிருந்தனர். போட்டியின் 7ஆவது நிமிடத்தில் ஞானமுருகன் அணியின் வகின்சன் முதல் கோலினைப் பெற்றுக்கொடுத்து அணியினை முன்னிலைப்படுத்தினார்.

பலம் மிக்க சென் மேரிசை வீழ்த்தியது செரண்டிப் அணி

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரீமியர் லீக் பிரிவு ஒன்று (டிவிஷன் l) தொடருக்கான மற்றொரு போட்டியில் யாழ் மண்ணின..

ஞானமுருகன் முன்னிலை பெற்றதும் போட்டி மேலும் விறுவிறுப்படைந்தது. போட்டியின் 17ஆவது நிமிடத்தில் சென் நிக்கிலஸ் அணிக்கு கிடைத்த கோணரினை நேர்த்தியாக அமிலன் உள்ளனுப்ப, சுரேஷ் அதனை லாவகமாகப் பயன்படுத்தி கோலாக்கினார்.

போட்டியின் 20ஆவது நிமிடத்தில் மீண்டும் சுரேஷ் ஹெடர் மூலம் அடுத்த கோலினைப்போட்டு அணியினை முன்னிலைப்படுத்தினார்.

ஞானமுருகனின் மற்றொரு முயற்சியாக சுரேஷ் உள்ளனுப்பிய பந்து நிக்கிலஸின் பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டது.

முதல் பாதி: ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் 01-02 சென். நிக்கிலஸ் விளையாட்டுக் கழகம் 

இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பமாகியதுமே அமிலன் மேற்கொண்ட முயற்சி தடுக்கப்பட்டது.

35ஆவது நிமிடத்தில் மத்திய கோட்டிற்கு அருகில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பினை பஸ்கால் பிளஸிங் கோல் கம்பத்திற்கு மேலால் உதைந்து வீணடித்தார்.

றொக்சன் மேற்கொண்ட முயற்சியினை ஞானமுருகன் பின்கள வீரரான சத்தியதரன் தடுத்தார்.

போட்டியின் 38ஆவது நிமிடத்தில் ரதீஸ் உதைந்த பந்தினை ஞானமுருகன் அணியின் கோல்காப்பாளர் சேகரித்த வேளை, பந்து அவரது கைகளிலிருந்து நழுவியது. மீண்டும் விரைந்து செயற்பட்ட சுரேஷ் பந்தினை கோலாக்கி, போட்டியில்  ஹெட்ரிக் கோலினை பதிவு செய்தார்.

நிக்கிலஸ் அணிக்கு பெனால்டி எல்லைக்கு அருகே கிடைத்த ப்ரீ கிக்கினை கம்பத்திற்கு மேலால் உதைந்து வீணடித்தார் ரதீஸ்.

ஞானமுருகனின் ஜெரோம் உதைந்த பந்தினை கோல் காப்பாளர் ஜெயபிரகாஷ் தடுக்க, அம்முயற்சியும் ஞானமுருகன் அணியினருக்கு வெற்றியளிக்கவில்லை.

ஆட்டத்தினை வேகப்படுத்தியிருந்த சென். நிக்கிலஸ் அணியினருக்கு 53ஆவது நிமிடத்தில் அமிலன் அடுத்த கோலினைப் பெற்றுக்கொடுத்தார்.

Interview with Popular football player Mohamed Issadeen

Interview with Mohamed Issadeen, Former Sri Lanka National football team player and current SL army football team player.

இறுதி நேரத்தில் ஞானமுருகனின் கனுஜன், பார்த்தீபன் ஆகியோருக்கு வாய்ப்புகள் கிடைத்தபோதும், அவர்கள் அவற்றை சாதகமாகப் பயன்படுத்தத் தவறினர்.

இறுதியில் நடப்பாண்டிற்கான பிரான்ஸ் தமிழ் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் சம்பியன் பட்டத்தினை தமதாக்கியது நாவாந்துறை சென். நிக்கிலஸ் அணி.

போட்டியின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர மேற்கொள்ளப்படாமை இரசிகர்களைக் கட்டுப்படுத்துவதற்கு கடினமாக அமைந்ததுடன், நடுவர்கள் தமது கடமையை சீராகச் செய்வதற்கும்  இடையூறாக அமைந்திருந்தது.

முழு நேரம்: ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் 01-04 சென். நிக்கிலஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

மயிலங்காடு ஞானமுருகன் வி.க – வகின்சன் 7′,

நாவாந்துறை சென். நிக்கிலஸ் வி.க – சுரேஸ் 17′, 20′, 38, அமிலன் 5

மூன்றாம் இடத்துக்கான போட்டி

இந்த ஆட்டத்தில் இளவாலை யங்ஹென்றீசியன்ஸ் மற்றும் மன்னார் சென். லூசியா அணிகள் மோதியிருந்தன. போட்டியில் ஜோன் பிங்கோ, அருளானந்தம் றொசி ஆகியோரது கோல்களின் உதவியுடன் 02-00 என்ற கோல்கள் கணக்கில் சென். லூசியா அணி வெற்றிபெற்று மூன்றாம் இடத்தினை தமதாக்கியது.

விருதுகள்

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் – சுரேஷ் – நாவாந்துறை சென். நிக்கிலஸ் வி.க

தொடர் நாயகன் – அமிலன் – நாவாந்துறை சென் நிக்கிலஸ் வி.க

சிறந்த கோல் காப்பாளர் – ஜெயபிரகாஷ் – நாவாந்துறை சென். நிக்கிலஸ் வி.க

சிறந்த வீரன் – வகின்சன் – மயிலங்காடு ஞானமுருகன் வி.க