அபு தாபி T10 தொடரில் இலங்கையின் 14 வீரர்கள்!

582
Abu Dhabi T10 League 2023

அபு தாபியில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அபு தாபி T10 தொடரில் இலங்கையைச் சேர்ந்த 14 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

மதீஷ பதிரண, சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹஸரங்க மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் வீரர்கள் வரைவுக்கு முன்னர் அணிகளால் வாங்கப்பட்டிருந்தனர். 

>> பாகிஸ்தான் மோதலுக்காக பூரண உடற்தகுதியினைப் பெற்றிருக்கும் மகீஷ் தீக்ஷன

இவ்வாறான நிலையில் நேற்று திங்கட்கிழமை (9) நடைபெற்று முடிந்த வீரர்கள் வரைவின் போது மேலும் 8 வீரர்கள் அணிகளால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

நியூவ் யோர்க் ஸ்ரைக்கர்ஸ் அணியில் குசல் பெரேரா, சாமிக்க கருணாரத்ன, லஹிரு குமார மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், குசல் மெண்டிஸ் பங்ளா டைகர்ஸ் அணிக்காகவும், துனித் வெல்லாலகே (டெல்லி புல்ஸ்), டில்ஷான் மதுஷங்க (டீம் அபு தாபி) மற்றும் நுவான் துாஷார (டெக்கன் கிளேடியேட்டர்ஸ்) ஆகியோரும் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். 

அபு தாபி T10 தொடரின் 7வது பருவகால போட்டிகள் நவம்பர் 28ம் திகதி முதல் டிசம்பர் 9ம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், பங்ளா டைகர்ஸ், டெக்கன் கிளேடியேட்டர்ஸ், நியூவ் யோர்க் ஸ்ரைக்கர்ஸ், மொரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி, நொர்தென் வொரியர்ஸ், டீம் அபு தாபி, டெல்லி புல்ஸ் மற்றும் தி சென்னை பிரேவ்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடவுள்ளன. 

தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கை வீரர்கள் 

  1. மதீஷ பதிரணபங்ளா டைகர்ஸ் 
  2. சரித் அசலங்கசென்னை பிரேவ்ஸ் 
  3. பானுக ராஜபக்ஷசென்னை பிரேவ்ஸ் 
  4. மஹீஷ் தீக்ஷனமொரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி 
  5. வனிந்து ஹஸரங்கநொர்தென் வொரியர்ஸ் 
  6. அஞ்செலோ மெதிவ்ஸ்நொர்தென் வொரியர்ஸ் 
  7. குசல் மெண்டிஸ்பங்ளா டைகர்ஸ் 
  8. குசல் பெரேரா  – நியூவ் யோர்க்ஸ் ஸ்ரைக்கர்ஸ் 
  9. சாமிக்க கருணாரத்னநியூவ் யோர்க்ஸ் ஸ்ரைக்கர்ஸ் 
  10. லஹிரு குமாரநியூவ் யோர்க்ஸ் ஸ்ரைக்கர்ஸ் 
  11. லசித் குரூஸ்புள்ளேநியூவ் யோர்க்ஸ் ஸ்ரைக்கர்ஸ் 
  12. துனித் வெல்லாலகேடெல்லி புல்ஸ் 
  13. டில்ஷான் மதுஷங்கடீம் அபு தாபி 
  14. நுவான் துஷாரடெக்கன் கிளேடியேட்டர்ஸ் 

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<