அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள 2020 மகளிர் T20 உலகக் கிண்ணம்

203
AFP

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான 2020ஆம் ஆண்டு T20 உலக சம்பியன்ஷிப் தொடர் (மகளிர் T20 உலகக் கிண்ணம்) மற்றும் ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கான T20 உலக சம்பியன்ஷிப் தொடர் (ஆடவர் T20 உலகக் கிண்ணம்) ஆகியவற்றை   அவுஸ்திரேலியாவில் வெவ்வேறு காலப்பகுதிகளில் நடாத்த தீர்மானித்துள்ளது.  

2020 டி-20 உலகக் கிண்ண நேரடித் தகுதியை இழந்த இலங்கை அணி

அவுஸ்திரேலியாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் டி-20 ..

அதன்படி அவுஸ்திரேலியாவில் 2020ஆம் ஆண்டின்  பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி தொடக்கம் மார்ச் 8ஆம் திகதி வரை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான T20 உலக சம்பியன்ஷிப் தொடர் நடைபெற, ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கான T20 உலக சம்பியன்ஷிப் தொடர் 2020ஆம் ஆண்டின் ஒக்டோபர் 18ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 15ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.  

ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கான T20 உலக சம்பியன்ஷிப் தொடரும், மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான T20 உலக சம்பியன்ஷிப் தொடரும்   ஒரே ஆண்டில், ஒரே நாட்டில் வேறு வேறான காலப்பகுதிகளில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

2020ஆம் ஆண்டிற்கான மகளிர் அணிகளுக்கான T20 உலக சம்பியன்ஷிப் தொடரில் 23 போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு, தொடரில் 10 நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் கிண்ணம் பெறும் கனவுகளுடன் விளையாடவுள்ளன. இதேவேளை ஆடவர் அணிகளுக்கான தொடரில் 46 போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு கிண்ணக் கனவுகளுடன் 16 நாடுகளின் ஆடவர் அணிகள் விளையாடுகின்றன.  

மகளிர் அணிகளுக்கான T20 உலக சம்பியன்ஷிப்  தொடரின் போட்டிகள் யாவும் அவுஸ்திரேலியாவின் 8 நகரங்களில் இடம்பெறவுள்ளதோடு, ஆடவர் அணிகளுக்கான போட்டிகள் யாவும் 12 நகரங்களில் நடைபெறும்.

அம்பத்தி ராயுடுவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை

இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு சர்வதேச போட்டிகளில் …

மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரில் போட்டியிடும் 10 நாடுகளின் மகளிர் அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறவுள்ளன.

இதில், 8 மகளிர் அணிகள் 2018ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற கடைசி மகளிர் T20 உலகக் கிண்ண தொடரின் மூலம் மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரிற்கு நேரடியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.  இதேநேரம், மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் ஏனைய இரண்டு அணிகளும் 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெறும் தகுதிகாண் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்படவிருக்கின்றன.

மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரில் பங்குபெறும் 10 அணிகளில் தகுதிகாண் போட்டிகளில் தெரிவு செய்யப்படும் முதல் அணியோடு சேர்த்து குழு A இல் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் காணப்படுகின்றன.

Photo Album : Sri Lanka vs Australia 1st Test – Day 2

இதேவேளை, குழு B இல் தகுதிகாண் போட்டிகளில் தெரிவு செய்யப்படும் இரண்டாவது அணியோடு சேர்த்து இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் மகளிர் அணிகள் காணப்படுகின்றன.

குழு  A குழு B
அவுஸ்திரேலியா இங்கிலாந்து
நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள்
இந்தியா தென்னாபிரிக்கா
இலங்கை பாகிஸ்தான்
தகுதிகாண் அணி 1 தகுதிகாண் அணி 2

மறுமுனையில் ஆடவர் அணிகளுக்கான T20 உலகக் கிண்ண சம்பியன்ஷிப் தொடரில் மோதும் 16 அணிகளில் கடந்த ஆண்டு நிறைவுக்கு வரும் போது .சி.சி. T20 அணிகளின் தரவரிசையில் முதல் பத்து இடங்களைப் பெற்ற ஆடவர் அணிகள் நேரடி தெரிவினைப் பெற்றிருக்கின்றன.

எனினும், குறித்த தரவரிசையில் கடைசி இரண்டு இடங்களை (9ஆவது, 10ஆவது) பெற்ற முன்னாள் சம்பியன் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் ஆடவர் அணிகளுக்கான T20 உலகக் கிண்ண சம்பியன்ஷிப் தொடரின்சுபர் 12” சுற்றுக்கு தெரிவாக தகுதிகாண் போட்டிகளில் 6 அணிகளுடன் இணைந்து விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.

சுபர் 12” சுற்றில் தகுதிகாண் போட்டிகளின் மூலம் தெரிவு செய்யப்படும் நான்கு அணிகளுடன் சேர்த்து 12 ஆடவர் அணிகள் மொத்தமாக காணப்படுகின்றன. ”சுபர் 12” சுற்றில் உள்ள இந்த 12 அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன் குழு A இல் தகுதிகாண் போட்டிகளில் தெரிவு செய்யப்படும் இரண்டு அணிகளுடன் சேர்த்து பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் காணப்படுகின்றன.

இதேவேளை குழு B இல் தகுதிகாண் போட்டிகளில் தெரிவு செய்யப்படும் ஏனைய இரண்டு அணிகளுடன் சேர்த்து இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

குழு A குழு B
பாகிஸ்தான் இந்தியா
அவுஸ்த்திரேலியா இங்கிலாந்து
மேற்கிந்திய தீவுகள் ஆப்கானிஸ்தான்
நியூசிலாந்து தென்னாபிரிக்கா
தகுதிகாண் அணி 1 தகுதிகாண் அணி 3
தகுதிகாண் அணி 2 தகுதிகாண் அணி 4

ஆடவர், மகளிர் என இரண்டு வகை T20 உலக சம்பியன்ஷிப் தொடர்களிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெவ்வேறு குழுக்களில் உள்ளடக்கப்பட்ட காரணத்தினால், 2011ஆம் ஆண்டிற்குப் பின்னர் இரண்டு அணிகளும் .சி.சி. ஏற்பாடு செய்திருக்கும் இரண்டு தொடர்களிலும் முதற்கட்டப் போட்டிகளின் போது விளையாட முடியாத சந்தர்ப்பம் உருவாகியிருக்கின்றது.

மகளிர் அணிகளுக்கான  T20 உலக சம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுவதோடு, ஆடவர் அணிகளுக்கான தொடரின் முதல் (”சுபர் 12” சுற்று) போட்டியில் T20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியும் அவுஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

இரண்டு வகையான T20 உலக சம்பியன்ஷிப் தொடர்களினதும் இறுதிப் போட்டிகள் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றன.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<