டினோசன் இரட்டைச் சதம்; சென் ஜோன்ஸ் ஸ்கந்தவரோதய மோதல் சமநிலையில் நிறைவு

71
Schools Cricket

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகளுக்கு இடையிலான நட்புறவு ரீதியிலான போட்டி 20  மற்றும் 21 ஆம் திகதிகளில் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. போட்டியின் இறுதி நாளான நேற்றைய தினம் (21) போட்டியானது சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரிக்காக சுகேதன், தனுஜன் ஜோடி ஆரம்ப விக்கெட்டுக்காக 87 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்ததொரு ஆரம்பத்தை வழங்கினர். தொடர்ந்து வந்த வீரர்கள் பிரகாசிக்க தவறிய போதும், சென் ஜோன்ஸ் கல்லூரி 5 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களைப்  பெற்றிருக்கையில் மத்திய வரிசையில் களமிறங்கிய டினோசன் அபாரமாக துடுப்பெடுத்தாடி 19 பௌண்டரிகள் 10 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 147 பந்துகளில் 201 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார், மறுமுனையில் கல்லூரியின் முதல் பதினொருவர் அணிக்காக தனது முதலாவது சதத்தினை பதிவு செய்த அன்ரன் அபிஷேக் ஆட்டமிழக்காது 117  ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

நீண்டகால இடைவெளிக்கு பின்னர் இருதரப்பு தொடரொன்றில் மோதவுள்ள இலங்கை – மேற்கிந்திய தீவுகள்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்

457 என்ற இமாலய ஓட்ட எண்ணிக்கையை பெற்றிருக்கையில் சென் ஜோன்ஸ் கல்லூரி தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியது. ஸ்கந்தவரோதயா கல்லூரி சார்பாக பந்துவீச்சில் பிரிந்தன் 3 விக்கெட்டுக்களையும், சாரதன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதய அணியினர் 130 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர். ஸ்கந்தவரோதய கல்லூரி சார்பாக அதிகபட்சமாக சாரதன் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். சென் ஜோன்ஸ் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் விதுஷனிற்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் அணிக்கு சபேசன் அரைச்சதத்தினை பெற்றுக்கொடுக்க, 97 ஓட்டங்களோடு சென் ஜோன்ஸ் கல்லூரி தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது. 

421 என்ற இமாலய வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதய கல்லூரியினர் 5 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றிருக்கையில் போட்டி நிறைவுக்கு வந்தது. 

போட்டியின் சுருக்கம் 

சென் ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 454/6 (77) – டினோஷான் 201, அபிஷேக் 117*, பிரிந்தன் 3/113, சாரதன் 2 / 53 

ஸ்கந்தவரோதயா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 130 (50) – சாரதன் 32 , விதுஷன் 4 / 39 

சென் ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) –  97/4d (20.5) – சபேசன் 63, ரெக்சன் 2/13 

ஸ்கந்தவரோதயா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 107/5 (42 ) – பிரஷன் 33, தனுஷ்ராஜ் 30, வினோஜன்  2 /4  

 

முடிவு – முதலாவது இன்னிங்ஸ் புள்ளிகள் அடிப்படையில் சென் ஜோன்ஸ் கல்லூரி வெற்றி 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க