இரட்டை ஹெட்ரிக் சாதனையில் இலங்கையரின் ஆதிக்கம்

921
hat-tricks
 

சர்வதேச T20 மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் ஹெட்ரிக் விக்கெட் எடுப்பது மிகவும் அரிதான சாதனையாகும். தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவது எப்போதுமே துடுப்பெடுத்தாடுகின்ற அணியை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இது பந்துவீசுகின்ற அணிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொடுக்கிறது.

T20i கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 27 தடவைகள் ஹெட்ரிக் சாதனைகளும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 49 தடவைகள் ஹெட்ரிக் சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், T20i மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டிலும் நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஹெட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

எனவே,T20i மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்த தனித்துவமான சாதனையை நிகழ்த்திய இந்த நான்கு பந்துவீச்சாளர்களைப் பார்ப்போம்.

பிரெட் லீ (அவுஸ்திரேலியா)

ஒருநாள், T20i இரண்டிலும் ஹெட்ரிக் எடுத்த முதல் வீரர் பிரெட் லீதான். மேலும், T20i கிரிக்கெட்டில் ஹெட்ரிக் எடுத்த முதல் வீரராகவும் இவர் இடம்பிடித்தார்.

இவர், 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற அங்குரார்ப்பண T20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 17ஆவது ஓவரின்போது சகிப் அல் ஹசன், மஷ்ரபி மோர்டசா, அலோக் கபாலி ஆகியோரை வரிசையாக அரங்கிற்கு அனுப்பி ஹெட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.

அதேபோல், சர்வதேச ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தமட்டில் 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் கென்யாவுக்கு எதிராக கே. ஒட்டியனோ, படேல், ஒபுயா ஆகிய மூன்றுபேரை வீழ்த்தி ஹெட்ரிக் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திசர பெரேரா (இலங்கை)

T20i மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரரான திசர பெரேரா இடம்பிடித்தார்.

2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் 4ஆவது போட்டியில் யூனிஸ் கான், சஹீட் அப்ரிடி மற்றும் சர்பராஸ் அஹமட் ஆகியோரை வரிசையாக அரங்கிற்கு அனுப்பி, தனது முதலாவது ஹெட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.

>> 49 வருடங்களில் 4 தடவைகள் மாத்திரம் பதிவாகிய அரிய சாதனை!

குறித்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா, சுரேஷ் ரெய்னா மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோரது விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார்.

லசித் மாலிங்க (இலங்கை)

உலக அளவில் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளராக வலம்வந்த இலங்கையைச் சேர்ந்த லசித் மாலிங்க, இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறையும், T20i கிரிக்கெட்டில் 2 முறையும் ஹெட்ரிக் வீழ்த்தியிருக்கிறார். இதன்மூலம் T20i மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரராக இடம்பிடித்தார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.

பின்னர், 2017இல் பங்களாதேஷிற்கு எதிரான T20i போட்டியில் முஷ்பிகுர் ரஹீம், மஷ்ரபி மோர்டசா, மெஹிதி ஹசன் ஆகியோரை வரிசையாக அரங்கிற்கு அனுப்பி, தனது முதல் T20i ஹெட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.

வனிந்து ஹஸரங்க (இலங்கை)Four Bowlers with hat-tricks

கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பந்துவீச்சில் மிரட்டி அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டுள்ள இலங்கையின் இளம் சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க, T20i மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரராக இடம்பிடித்தார்.

தற்போது T20i கிரிக்கெட்டில் உலகின் நம்பர்-1 பந்துவீச்சாளராக வலம்வருகின்ற அவர், 2017இல் காலியில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20i உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஹெட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். குறித்த போட்டியில் எய்டன் மார்க்ரம், டெம்பா பவுமா மற்றும் பிரிடோறியஸ் ஆகியோரை தொடர்ச்சியாக அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தியிருந்தார்.

இருப்பினும், குறித்த போட்டியில் கடைசி ஓவரில் டேவிட் மில்லரின் அதிரடியால் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<