T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது!

ICC Men’s T20 World Cup 2024

250
Fixtures revealed for ICC Men’s T20 World Cup 2024

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

T20 உலகக்கிண்ணத்தின் போட்டி அட்டவணையின்படி அமெரிக்காவின் 3 மைதானங்களிலும், மேற்கிந்திய தீவுகளின் 6 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

>> T20 உலகக்கிண்ணத்துக்கான குழு விபரங்கள் வெளியானது!

அதன்படி இலங்கை அணி D குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் தங்களுடைய முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை ஜூன் 3ம் திகதி நியூ யோர்க்கில் எதிர்கொள்கின்றது. 

அதனைத்தொடர்ந்து ஜூன் 7ம் திகதி பங்களாதேஷ் அணியையும், ஜூன் 11ம் திகதி நேபாளம் அணியையும், ஜூன் 16ம் திகதி நெதர்லாந்து அணியையும் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது. 

மொத்தமாக விளையாடவுள்ள 20 அணிகளில் 10 அணிகள் முதல் 29 நாட்கள் அமெரிக்காவில் போட்டியிடுகின்றன. அதன் அடிப்படையில் 16 போட்டிகள் டளாஸ், லவுடர்ஹில் மற்றும் நியூ யோர்க் மைதானங்களில்ந நடைபெறவுள்ளன. இதில் இந்தியாபாகிஸ்தான் போட்டி நியூ யோர்க்கில் ஜூன் 9ம் திகதி நடைபெறவுள்ளது. 

அதேநேரம் மேற்கிந்திய தீவுகளின் ஆறு வெவ்வேறு மைதானங்களில் 41 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் அரையிறுதிப்போட்டிகள் ட்ரினிடட் மற்றும் டொபேகோ மற்றும் கயானாவில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப்போட்டி ஜூன் 29ம் திகதி பார்படோஸில் நடைபெறவுள்ளது. 

போட்டி அட்டவணை 

  • ஜூன் 1அமெரிக்கா எதிர் கனடா (டளாஸ்) 
  • ஜூன் 2 மே.தீவுகள் எதிர் பப்புவா நியூ கினியா (கயானா) 
  • ஜூன் 2 நமீபியா எதிர் ஓமான் (பார்படோஸ்) 
  • ஜூன் 3 இலங்கை எதிர் தென்னாபிரிக்கா (நியூ யோர்க்) 
  • ஜூன் 3ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா (கயானா) 
  • ஜூன் 4 இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து (பார்படோஸ்) 
  • ஜூன் 4 நெதர்லாந்து எதிர் நேபாளம் (டளாஸ்) 
  • ஜூன் 5 இந்தியா எதிர் அயர்லாந்து (நியூ யோர்க்) 
  • ஜூன் 5 பப்புவா நியூ கினியா எதிர் உகண்டா (கயானா) 
  • ஜூன் 5 அவுஸ்திரேலியா எதிர் ஓமான் (பார்படோஸ்) 
  • ஜூன் 6 அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் (டளாஸ்) 
  • ஜூன் 6 நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து (டளாஸ்) 
  • ஜூன் 7 கனடா எதிர் அயர்லாந்து (நியூ யோர்க்) 
  • ஜூன் 7நியூசிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் (கயானா) 
  • ஜூன் 7 இலங்கை எதிர் பங்களாதேஷ் (டளாஸ்) 
  • ஜூன் 8 நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா (நியூ யோர்க்) 
  • ஜூன் 8 அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து (பார்படோஸ்) 
  • ஜூன் 8 மே.தீவுகள் எதிர் உகண்டா (கயானா) 
  • ஜூன் 9 இந்தியா எதிர் பாகிஸ்தான் (நியூ யோர்க்) 
  • ஜூன் 9 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து (ஆண்டிகா) 
  • ஜூன் 10 தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் (நியூ யோர்க்) 
  • ஜூன் 11 பாகிஸ்தான் எதிர் கனடா (நியூ யோர்க்) 
  • ஜூன் 11 இலங்கை எதிர் நேபாளம் (ப்ளோரிடா) 
  • ஜூன் 11 அவுஸ்திரேலியா எதிர் நமீபியா (ஆண்டிகா) 
  • ஜூன் 12 அமெரிக்கா எதிர் இந்தியா (நியூ யோர்க்) 
  • ஜூன் 12 மே.தீவுகள் எதிர் நியூசிலாந்து (ட்ரினிடட்) 
  • ஜூன் 13 இங்கிலாந்து எதிர் ஓமான் (ஆண்டிகா) 
  • ஜூன் 13 பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து (சென். வின்செண்ட்) 
  • ஜூன் 13 ஆப்கானிஸ்தான் எதிர் பப்புவா நியூ கினியா (ட்ரினிடட்) 
  • ஜூன் 14 அமெரிக்கா எதிர் அயர்லாந்து (ப்ளோரிடா) 
  • ஜூன் 14 தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் (சென். வின்செண்ட்) 
  • ஜூன் 14 நியூசிலாந்து எதிர் உகண்டா (ட்ரினிடட்) 
  • ஜூன் 15 இந்தியா எதிர் கனடா (ப்ளோரிடா) 
  • ஜூன் 15 நமீபியா எதிர் இங்கிலாந்து (ஆண்டிகா) 
  • ஜூன் 15 அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து (சென்.லூசியா) 
  • ஜூன் 16 பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து (ப்ளோரிடா) 
  • ஜூன் 16 பங்களாதேஷ் எதிர் நேபாளம் (சென்.வின்செண்ட்) 
  • ஜூன் 16இலங்கை எதிர் நெதர்லாந்து (சென்.லூசியா) 
  • ஜூன் 17 நியூசிலாந்து எதிர் பப்புவா நியூ கினியா (ட்ரினிடட்) 
  • ஜூன் 17 மே.தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் (சென்.லூசியா) 
  • ஜூன் 19 – A2 v D1, ஆண்டிகா 
  • ஜூன் 19– B1 v C2, சென். லூசியா 
  • ஜூன் 20 – C1 v A1, பார்படோஸ் 
  • ஜூன் 20 – B2 v D2, ஆண்டிகா 
  • ஜூன் 21 – B1 v D1, சென். லூசியா 
  • ஜூன் 21 – A2 v C2, பார்படோஸ் 
  • ஜூன் 22 – A1 v D2, ஆண்டிகா 
  • ஜூன் 22 – C1 v B2, சென்.வின்செண்ட் 
  • ஜூன் 23 – A2 v B1, பார்படோஸ் 
  • ஜூன் 23 – C2 v D1, ஆண்டிகா 
  • ஜூன் 24 – B2 v A1, சென். லூசியா 
  • ஜூன் 24– C1 v D2, சென். வின்செண்ட் 
  • ஜூன் 26 – Semi-Final 1, கயானா 
  • ஜூன் 27 – Semi-Final 2, ட்ரினிடட் 
  • ஜூன் 29 – Final, பார்படோஸ் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<