ஆசியக்கிண்ணம் 2025; சுப்பர் 4 சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியானது

Asia Cup 2025

85
 Asia Cup 2025

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஆசியக்கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள அணிகள் உறுதியாகியுள்ளதுடன், போட்டி அட்டவணையும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆசியக்கிண்ண சுப்பர் 4 சுற்றுக்கு இந்தியா (A1), பாகிஸ்தான் (A2), இலங்கை (B1) மற்றும் (B1) மற்றும் பங்களாதேஷ் (B2) அணிகள் தகுதிபெற்றுள்ளன.

>>இந்திய அணிக்காக மீண்டும் ஆடவுள்ள அஸ்வின்<<

இதில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சுப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை நாளை (20) டுபாயில் எதிர்கொள்ளவுள்ளது.

அதனை தொடர்ந்து 23ஆம் திகதி பாகிஸ்தான் அணியையும், 26ஆம் திகதி இந்திய அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. இதில் அதிக புள்ளிகளை பெறும் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பர் 4 சுற்றுக்கான போட்டி அட்டவணை

  • இலங்கை எதிர் பங்களாதேஷ் | செப்டம்பர் 20 | டுபாய் 
  • இந்தியா எதிர் பாகிஸ்தான் | செப்டம்பர் 21 | டுபாய்
  • இலங்கை எதிர் பாகிஸ்தான் | செப்டம்பர் 23 | அபு தாபி
  • இந்தியா எதிர் பங்களாதேஷ் | செப்டம்பர் 24 | டுபாய் 
  • பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் | செப்டம்பர் 25| டுபாய் 
  • இலங்கை எதிர் இந்தியா | செப்டம்பர் 26| டுபாய்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<