இந்திய தொடரில் விளையாடவுள்ள மெதிவ்ஸின் எதிர்பார்ப்பு

1047

இலங்கை கிரிக்கெட் அணி இம்மாதம் நடுப்பகுதியில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 தொடரில் விளையாடுவதற்காக எதிர்வரும் 8ஆம் திகதி இந்தியா நோக்கி பயணமாகவுள்ளது.

அணியில், டெஸ்ட் தொடரொன்றில் விளையாடிய அதிக அனுபவத்தைக் கொண்ட வீரர்களில் ஒருவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் விளங்குகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின்போது உபாதைக்குள்ளாகியிருந்த மெதிவ்ஸ், அண்மையில் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் அணியுடனான போட்டித் தொடரிலும் பங்கேற்கவில்லை.

இந்தியாவுடனான தொடரில் மெதிவ்ஸ், அசேல மற்றும் குசல் இலங்கை அணியில்

எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில்…

எனினும், தற்போது உபாதையிலிருந்து பூரண குணமடைந்துள்ள மெதிவ்ஸ், இந்திய அணியுடனான போட்டித் தொடரில் களமிறங்கவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது குறித்து இந்தியாவின் பிரபல க்ரிக் பஸ் (CRICBUZZ)  இணையத்தளத்துக்கு மெதிவ்ஸ் நேர்காணலொன்றை வழங்கியுள்ளார்.

அதில் அவர், ”உண்மையில் கடந்த சில மாதங்கள் எனக்கு சிறப்பாக அமையவில்லை. நான் 2013 முதல் 2016 வரை தொடர்ச்சியாக இலங்கை அணிக்காக விளையாடியுள்ளேன். எனினும், துரதிஷ்டவசமாக தொடர் உபாதைகள் காரணமாக என்னால் அணிக்கு கிடைக்க வேண்டிய 100 சதவீத பங்களிப்பினை வழங்க முடியாமல் போனது. எனக்கு அடிக்கடி ஏற்படுகின்ற உபாதை குறித்து இலங்கை மற்றும் இங்கிலாந்திலுள்ள வைத்தியர்களிடம் ஆலோசகைளைப் பெற்றேன். அவர்கள் அதற்காக செய்யவேண்டிய ஒரு சில மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உடற் பயிற்சிகளை நியமித்து தந்துள்ளனர்.

எனவே தற்போது அதை நான் உரிய முறையில் பின்பற்றி வருகின்றேன். இதுதொடர்பில் தேர்வாளர்களுக்கும் அறியப்படுத்தியுள்ளேன். எனவே எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளை விட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் மாத்திரம் பந்து வீசுவதற்கு தயாராகி வருகின்றேன் என்றார்.

இதேவேளை இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இந்திய சுற்றுப்பயணம் மிகவும் கடினமாக இருக்கும் என்றாலும், அத்தொடரை சிறந்த முறையில் எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக மெதிவ்ஸ் இந்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கை A அணிக்கு தொடர் தோல்வியை தவிர்க்க வைத்த நேற்றைய போட்டி முடிவு

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் A…

இதுவரை இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் தோல்வி அடையச் செய்யாத அணிகளாக இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் விளங்குகின்றன.

”இந்தியாவுடன் விளையாடுவதென்பது இலகுவான விடயமல்ல. அதுவும் இந்திய மண்ணில் அதைச் செய்வதென்பது மிகவும் கஷ்டமாகும். எனினும், இப்போட்டித் தொடரை சிறந்த முறையில் முகங்கொடுப்பதற்கு நாம் தயார் நிலையில் உள்ளோம். அதுவும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்திய அணியுடனான அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது குறித்து கவலையடையத் தேவையில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

சுமார் 8 வருடங்களுக்கு முன் தன்னுடைய முதல் வெளிநாட்டு தொடராக இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த மெதிவ்ஸ் (22 வயது), ஒரு ஓட்டத்தினால் தனது கன்னிச் சதத்தை தவறவிட்டார்.

இது குறித்து தெரிவித்த முன்னாள் தலைவர் மெதிவ்ஸ், ”எனது வாழ்க்கையில் இடம்பெற்ற மறக்க முடியாத சம்வம் இதுவாகும். அப்போட்டியில் நான் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது சச்சின் டெண்டுல்கரின் அபார களத்தடுப்பால் 99 ஓட்டங்களைப் பெற்ற பிறகு இன்னுமொரு ஓட்டத்துக்காக ஓடியபோது துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தேன். அது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தாலும், மிகச் சிறந்த பாடமாகவும் அமைந்தது” என்றார்.

இந்திய தொடரில் பிரகாசிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள மெதிவ்ஸ், இவ்விசேட நேர்காணலின் இறுதியில், இந்த தொடரில் தான் மட்டுமே அதிக அனுபவம் மிக்க வீரராக உள்ளமையினால் அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கான மிகப் பெரிய பொறுப்பும் தனக்கு உள்ளது அண்மைக்காலமாக பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், .பி.எல் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட பல வீரர்கள் அணியில் இருக்கின்றார்கள். எனவே இத்தொடரில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வார்கள் என தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

WBBL தொடரில் ஒப்பந்தமாகிய முதல் இலங்கை வீராங்கணையாக சாமரி

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்ட…

இதேவேளை, ஐந்தாவது தடவையாக இன்று ஆரம்பமான பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T-20 தொடரில், தமீம் இக்பால் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக முதற்தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸ், இந்திய அணியுடனான போட்டித் தொடர் முழுவதும் விளையாடவுள்ளதால், பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை BPL தொடரில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க முதற் தடவையாக களமிறங்கவுள்ளார். அத்துடன், குறித்த தொடருக்கு இலங்கையிலிருந்து 12 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஷெஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா, தசுன் சானக்க, டில்ஷான் முனவீர, லசித் மாலிங்க, உபுல் தரங்க மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ளனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க