துர்க்மெனிஸ்தானிடம் வீழ்ந்தது இலங்கை

52
 

பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாவது சுற்றில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் துர்க்மெனிஸ்தான் அணிக்கு கடும் சவால் கொடுத்து 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

கொழும்பு, ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற இந்தப் போட்டியில் துர்க்மெனிஸ்தான் முதல் பாதியின் ஆரம்பத்திலும் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலும் கோல்களை புகுத்தி வெற்றி பெற்றது. 

சொந்த மண்ணில் துர்க்மெனிஸ்தானை இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளும்?

இலங்கை கால்பந்து அணி, சுமார் 15 வருடங்களின் பின்னர் பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் மோதலில்

போட்டி ஆரம்பித்த விரைவில் துர்க்மெனிஸ்தான் வீரர்கள் இலங்கை கோல் எல்லையை ஆக்கிரமிக்க முயன்றனர். இதன் மூலம் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலை பெறமுடிந்தது. 8ஆவது நிமிடத்தில் வைத்து பெனல்டி பெட்டியின் இடது பக்க மூலையில் இருந்து பந்தை பெற்ற துர்க்மெனிஸ்தான் வீரர் ஒரசாகூவ் வாஹிட் அதனை கோலாக மாற்றினார்.

எனினும் முதல் பாதியின் நடுப்பகுதியில் இலங்கை வீரர்கள் பந்தை நேர்த்தியாக பரிமாற்றி எதிரணி கோல் பகுதிக்குள் அடிக்கடி நுழைய ஆரம்பித்தனர். 

16ஆவது நிமிடத்தில் போட்டியின் முதல் கோனர் கிக் வாய்ப்பை துர்க்மெனிஸ்தான் பெற்றபோதும் அதனைத் தடுக்க இலங்கை பின்கள வீரர்களால் முடிந்தது. 

ஒரு நிமிடம் கழித்து அணித்தலைவர் கவிந்து இஷான் எதிரணி பெனால்டி பெட்டிக்கு அருகில் இருந்து நேராக பந்தை கோலை நோக்கி உதைத்தபோது துர்க்மெனிஸ்தான் கோல்காப்பாளர் அந்தப் பந்தை பாய்ந்து தடுத்தார். அதனைத் தொடர்ந்து கிடைத்த கோனர் கிக்கிலும் இலங்கை அணி கோல் பெறும் வாய்ப்பை தவறியது. 

26 ஆவது நிமிடத்தில் துர்க்மெனித்தானுக்கு கோல் பெறும் பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டிய நிலையில் கோல் கம்பத்தின் மிக அருகில் வைத்து சமீர சிறப்பாக தடுத்தார். அதேபோன்று ஒரு நிமிடம் கழித்து துர்க்மெனிஸ்தான் வீரர்கள் மீண்டும் கோல் முயற்சியில் ஈடுபட்டபோதும் அது நூலிழையில் தவறியது. 

இந்நிலையில் 35 ஆவது நிமிடத்தில் ஜூட் சுமன் மஞ்சள் அட்டை பெற்ற நிலையில் 38 ஆவது நிமிடத்தில் துர்க்மெனிஸ்தான் வீரர் யில்யாசோ வசிர்கோல்டி மஞ்சள் அட்டை ஒன்றை பெற்றார்.

முதல் பாதியில் துர்க்மெனிஸ்தான் அணிக்கு நிகராக பந்தை பரிமாற்றி விளையாடிய இலங்கை வீரர்கள் சில வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டதை காண முடிந்தது.

முதல் பாதி: துர்க்மெனிஸ்தான் 1 – 0 இலங்கை

இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலும் துர்க்மெனிஸ்தான் வீரர்கள் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தியோடு இலங்கை அணியின் கோல் கம்பத்தை அடிக்கடி ஆக்கிரமித்தனர். எனினும் முதல் பாதியை விடவும் இலங்கை வீரர்கள் அதிக தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

துர்க்மெனிஸ்தனை உறுதியுடன் எதிர்கொள்ள இலங்கை தயார்

இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தான் அணிகளுக்கு இடையே இடம்பெறவிருக்கும் 2022 பிஃபா உலகக்

இந்நிலையில் 52 ஆவது நிமிடத்தில் சரித்த செய்த அநாவசியமான தவறு இலங்கை அணிக்கு பாதகமாக முடிந்தது. இலங்கையின் பெனல்டி எல்லைக்கு நெருக்கமாக அவர் துர்க்மெனிஸ்தான் வீரருக்கு பின்புறமாக பந்தை பெற முயன்று மஞ்சள் அட்டை பெற்றதோடு, அதன் காரணமாக துர்க்மெனிஸ்தான் அணிக்கு ப்ரீ  கிக் வழங்கப்பட்டது.

அந்த ப்ரீ கிக்கை மிகத் தாழ்வாக உதைத்த அமானொவ் அர்சலான் துர்க்மெனிஸ்தான் அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து துர்க்மெனிஸ்தான் அணி அடிக்கடி  அணியின் பெனல்டி பெட்டியை ஆக்கிரமித்து.

மறுபுறம் முழுமையாக தற்காப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள் இரண்டாவது பாதியில் துர்க்மெனிஸ்தான் பெனல்டி பெட்டியை ஆக்கிரமிக்க தவறினர். 

எனினும் உலகத் தரவரிசையில் 200 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை கால்பந்து அதிகம் பிரபலம் பெற்ற உலகத் தரவரிசையில் 132 ஆவது இடத்தில் இருக்கும் துர்க்மெனிஸ்தானை இரண்டு கோல்களுடன் மட்டுப்படுத்தியது பெரும் அடைவாக கருத முடியும். 

இலங்கை அணி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் H குழுவுக்கான அடுத்த போட்டியில் வட கொரிய அணியை எதிர்கொள்ளவுள்ளது. வட கொரியா தனது முதல் தகுதிகாண் போட்டியில் லெபனான் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.     

முழு நேரம்: துர்க்மெனிஸ்தான் 2 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

துர்க்மெனிஸ்தான் – ஒரசாகூவ் வாஹிட் 8’, அமானொவ் அர்சலான் 53’  

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க