பிரேசில் பயிற்சியாளர் டிடே ராஜினாமா; ‘மதில் மேல்’ நெய்மார்

123

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதியில் குரோசியாவிடம் தொற்று வெளியேறியதை அடுத்து பிரேசில் பயிற்சியாளர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

“சுழற்சி முடிந்தது. எனது வார்த்தையை நான் செயற்படுத்துகிறேன்” என்று கடந்த ஆறு அண்டுகளாக பிரேசில் பயிற்சியாளராக செயற்பட்ட 61 வயதுடைய டிடே வெள்ளிக்கிழமை (09) போட்டிக்குப் பின்னர் தெரிவித்துள்ளார்.

“எனது இடத்தை நிரப்ப சிறந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் (குரோசியா) கோல்காப்பாளர் (டொமினிக் லிவகோவிச்) களந்தில் சிறந்த வீரராக இருக்கும்போது அட்டம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது.

கோல்களை பெறுவதில் நாம் இன்னும் சிறப்பாக செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒட்டுமொத்தமாக பிரேசில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதா என்ற கேள்வி எழுகிறது” என்று டிடே கூறினார்.

பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா அரையிறுதியில் ஆர்ஜன்டீனாவுடன் மோதல்

கடந்த 2016ஆம் ஆண்டு பிரேசில் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற டிடே பிரேசில் அணி 2019இல் கோபா அமெரிக்கா கிண்ணத்தை வெல்ல அணியை வழி நடத்தியபோதும் அவரின் பயிற்சியின் கீழ் பிரேசில் அணி இரண்டு உலகக் கிண்ணங்களில் காலிறுதியுடன் வெளியேறியது.

எனினும் டிடேவின் பயிற்சியின் கீழ் பிரேசில் அணி ஆடிய 81 போட்டிகளில் 61இல் வெற்றியீட்டி இருப்பதோடு ஏழு போட்டிகளில் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. இது குறித்து அவர் குறிப்பிடுகையில் “இது மிகவும் கடினமாக உள்ளது. இது ஒரு வலி தரும் தோல்வி, ஆனால் நான் அமைதியுடன் செல்கிறேன். இது சுழற்சி ஒன்றின் முடிவு” என்று டிடே கூறுகிறார்.

இதேவேளை, பிரேசில் அணிக்காக தொடர்ந்து ஆடுவது பற்றி நூறு வீதம் உறுதி கூற முடியாது என்று பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் குறிப்பிட்டுள்ளார்.

குரோசியாவுடனான காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணி பெனால்டி சூட் அவுட் முறையில் 2-4 என்ற கோல் விதியாசத்தில் தோற்று வெளியபோதும் நெய்மார் அந்தப் போட்யின் 105ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் அவர் பிரேசில் அணிக்காக அதிக கோல் பெற்ற பீலேவின் சாதனையை (77)  சமன் செய்தார்.

இளையோர் கபடியில் சபிஹான், டிலக்ஷனா சிறந்த வீரர்களாக தெரிவு

இந்நிலையில் 30 வயதான நெய்மார் தனது எதிர்காலம் பற்றி தீர்மானிப்பதில் உறுதியற்ற நிலைப்பாட்டில் உள்ளார். “இது பற்றி இன்னும் யோசிக்க வேண்டியுள்ளது” என்றார்.

“தேசிய அணிக்காக எந்தக் கதவையும் நான் சாத்தவில்லை. ஆனால் நான் மீண்டும் திரும்புவதை 100 வீதம் உறுதி செய்ய முடியாது” என்று பிரேசில் அணிக்காக 18 வயதிலேயே சர்வதேச கால்பந்தில் ஆட வந்த நெய்மார் குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில் அணிக்காக மூன்று உலகக் கிண்ணத் தொடர்களில் ஆடியிருக்கும் நெய்மார் 2014இல் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற உதவியபோதும் அடுத்த இரு உலகக் கிண்ணங்களிலும் காலிறுதியில் தோற்றது.

“அணிக்கும் எனக்கும் எது சிறந்தது என்று தீர்மானிக்க எனக்கு இன்னும் காலம் தேவைப்படுகிறது” என்றார் அவர்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<