ரிச்சட்ஸ்-போத்தம் கிண்ணமாக மாற்றமடையும் விஸ்டன் கிண்ணம்!

179
espncricinfo

இங்கிலாந்து மற்றும்  மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் கடந்த 1963ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் விஸ்டன் கிண்ணத்தினை எதிர்வரும் காலங்களில் ரிச்சட்ஸ்-போத்தம் கிண்ணமாக விளையாட முடியுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த இந்த மாற்றத்தினை இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரண்டு கிரிக்கெட் சபைகளும் இணைந்து மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

யூரோ T20 ஸ்லேம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

கிரிக்கெட்டின் பைபல் என கருதப்படும் விஷ்டனை கௌரவப்படுத்தும் முகமாக, 1963ம் ஆண்டு விஸ்டன் கிண்ணம் ஆரம்பிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்கள் இவ்வாறு விஸ்டன் கிண்ணமாக பெயரிடப்பட்டு விளையாடப்பட்டு வந்தது

இவ்வாறான நிலையில், இந்த ஆண்டிலிருந்து விஸ்டன் கிண்ணம் விளையாடப்படாமல், அதற்கு பதிலாக ரிச்சட்ஸ்போத்தம் கிண்ணம் விளையாடப்படவுள்ளது. அதேநேரம், விஸ்டன் கிண்ணமானது லோர்ட்ஸில் உள்ள கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது.

இயன் போத்தம் மற்றும் எனக்கு இதுவொரு மிகப்பெரிய கௌரவம். அதேநேரம், சிறு வயதில் இருந்து நான் விரும்பிய விளையாட்டின், அதியுயர் கௌரவத்தை பெறுவது மிக மகிழ்ச்சியளிக்கிறது. இங்கிலாந்து சென்று சமரெஸ்ட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் போது, முதலில் சந்தித்த நபர் இயன் போத்தம். பின்னர், அவர் என்னுடைய நண்பராக மாறியதுடன், வாழ்நாள் முழுவதும் நாம் நண்பராக மாறினோம்.   

எமது கிரிக்கெட் வாழ்க்கையின் நன்நடத்தையை கண்டு இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபைகள் இந்த மரியாதையை வழங்கியுள்ளன. அத்துடன், எமது இருவருக்கும் இடையில் உள்ள கிரிக்கெட் உறவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாம் களத்தில் போட்டியாளர்களாக இருந்தாலும், அதற்கு வெளியில் நாம் சகோதரர்கள். எனவே, கிண்ணத்தின் ஒரு பக்கத்தில் எனது பெயரும், அடுத்த பக்கத்தில் போத்தமின் பெயரும் இடம்பெறுவதை நினைத்து பெருமையடைகிறேன்” என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சட்ஸன் குறிப்பிட்டார்.  

விவியன் ரிச்சட்ஸன் இங்கிலாந்து அணிக்கு எதிராக 62.36 என்ற சராசரியில் ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 8 சதங்களையும் விளாசியுள்ளார். அதேநேரம், போத்தம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகளில் 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

ரிச்சட்சன் நான் பார்த்ததில் உள்ள சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர்சிறந்த நன்பராக இருந்தாலும், மிகப்பெரிய போட்டியாளர். நாம் இருவரும் சந்தித்த பல்வேறு போட்டிகளில் அவர் எப்போதும் கடுமையான போட்டியாளராக இருப்பார்.  

டெஸ்ட் கிரிக்கெட்டின் போது மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்வது கடினமான விடயங்களில் ஒன்று. எனவே, கிண்ணத்தில் எமது இருவருடைய பெயரும் இடம்பெறுவது மிகப்பெரிய கௌரவமாகும். எனவே, இனிவரும் போட்டிகள் உற்சாகம் அளிக்கும் போட்டிகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்என இயன் போத்தம் தெரிவித்தார்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் விஸ்டன் கிண்ணத்தில் 27 தொடர்களை சந்தித்துள்ள நிலையில், 14 தொடர்களில் மேற்கிந்திய தீவுகள் வெற்றிபெற்றுள்ளதுடன், 9 தொடர்களில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இதில் 4 தொடர்கள் சமனிலையில் முடிவடைந்துள்ளன

இங்கிலாந்து அணி தங்களுடைய அடுத்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக 2022ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. குறித்த தொடர் முதல் ரிச்சட்ஸ்போத்தம் கிண்ணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க