Home Tamil பங்களாதேஷினை வீழ்த்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணி

பங்களாதேஷினை வீழ்த்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணி

239
Getty Images

T20 உலகக் கிண்ணத்தின் சுபர் 12 சுற்றுக்காக பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய போட்டியில், இங்கிலாந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> T20i புதிய தரவரிசையில் இலங்கை மற்றும் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்

அபுதாபி நகரில் தொடங்கிய இந்தப் போட்டியில் தமது முன்னைய மோதலில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து, T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் முதல் வெற்றியினை எதிர்பார்த்த பங்களாதேஷ் அணியினை எதிர்கொண்டது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஹமதுல்லா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றுக்கொண்டார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தொடக்கம் முதலே சரிவினைக் காட்டி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 124 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் முஷ்பிகுர் ரஹீம் 3 பௌண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார்.

மறுமுனையில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக அதன் வேகப்பந்துவீச்சாளரான டைமால் மில்ஸ் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மொயின் அலி மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் தங்களிடையே பகிர்ந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 125 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி, போட்டியின் வெற்றி இலக்கினை வெறும் 14.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 126 ஓட்டங்களுடன் அடைந்தது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த ஆரம்பத்துடுப்பாட்டவீரரான ஜேசன் ரோய், அரைச்சதம் விளாசியதுடன் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேநேரம், டாவிட் மலானும் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து தனது அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் சொரிபுல் இஸ்லாம் மற்றும் நசும் அஹ்மட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ஜேசன் ரோய் தெரிவாகினார். இப்போட்டியின் வெற்றியோடு T20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அடுத்தடுத்த தொடர் வெற்றிகளை பதிவு செய்ய, பங்களாதேஷ் அணிக்கு இது சுபர் 12 சுற்றில் இரண்டாவது தோல்வியாக மாறியிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்


Result


England
126/2 (14.1)

Bangladesh
124/9 (20)

Batsmen R B 4s 6s SR
Liton Das c Liam Livingstone b Moeen Ali 9 8 2 0 112.50
Mohammad Naim Sheikh c Chris Woakes b Moeen Ali 5 7 0 0 71.43
Shakib Al Hasan (vc) c Adil Rashid b Chris Woakes 4 7 0 0 57.14
Mushfiqur Rahim lbw b Liam Livingstone 29 30 3 0 96.67
Mahmudullah c Chris Woakes b Liam Livingstone 19 24 1 0 79.17
Afif Hossain run out () 5 6 1 0 83.33
Nurul Hasan c Jos Buttler b Tymal Mills 16 18 0 0 88.89
Mehidy Hasan Miraz c Chris Woakes b Tymal Mills 11 10 2 0 110.00
Nasum Ahmed not out 19 9 1 2 211.11
Mustafizur Rahman b Tymal Mills 0 1 0 0 0.00


Extras 7 (b 1 , lb 1 , nb 0, w 5, pen 0)
Total 124/9 (20 Overs, RR: 6.2)
Bowling O M R W Econ
Moeen Ali 3 0 18 2 6.00
Chris Woakes 4 0 12 1 3.00
Adil Rashid 4 0 35 0 8.75
Chris Jordan 2 0 15 0 7.50
Tymal Mills 4 0 27 3 6.75
Liam Livingstone 3 0 15 2 5.00


Batsmen R B 4s 6s SR
Jason Roy c Nasum Ahmed b Shoriful Islam 61 38 5 3 160.53
Jos Buttler c Mohammad Naim Sheikh b Nasum Ahmed 18 18 1 1 100.00
Dawid Malan not out 28 25 3 0 112.00
Jonny Bairstow not out 8 4 1 0 200.00


Extras 11 (b 0 , lb 6 , nb 0, w 5, pen 0)
Total 126/2 (14.1 Overs, RR: 8.89)
Bowling O M R W Econ
Shakib Al Hasan 3 0 24 0 8.00
Mustafizur Rahman 3 0 23 0 7.67
Shoriful Islam 3.1 0 26 1 8.39
Nasum Ahmed 3 0 26 1 8.67
Mehidy Hasan Miraz 2 0 21 0 10.50



முடிவு – இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>