பூட்டானுடனான இரண்டாவது நட்டுபுறவு கால்பந்து போட்டியில் இலங்கை மகளிர் தோல்வி

129

போட்டியின் ஆரம்பத்தில் பெற்றுக்கொடுத்த பெனால்டி வாய்ப்பு மூலம் பூட்டான் அணியுடனான இரண்டாவது நட்டுபுறவு சர்வதேச கால்பந்து போட்டியில் இலங்கை பெண்கள் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.   

பூட்டான், திம்பு சர்வதேச அரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற இந்தப் போட்டியின் 15 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்குள் இலங்கை அணித் தலைவி யுஷானி குணவர்தனவின் கையில் பந்து பட்டதால் எதிரணிக்கு ஸ்பொட் கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை ட்ஷெரிங் லங்டென் பூட்டான் அணிக்கு கோலாக மாற்றினார். 

இலங்கை கால்பந்து பயிற்றுவிப்பாளருக்கு எதிராக முகாமையாளர் பொலிஸில் முறைப்பாடு

இலங்கை கால்பந்து அணியின் தலைமை…

பூட்டான் அணியுடனான முதல் போட்டியின் கடைசி நேரத்தில் கோல் பெற்று வெற்றியீட்டிய உற்சாகத்துடனேயே இலங்கை பெண்கள் அணி இந்தப் போட்டியில் களமிறங்கியது. எனினும் முதல் போட்டி போன்றே இந்த ஆட்டத்திலும் பூட்டான் அணி ஆரம்பித்தில் ஆதிக்கம் செலுத்தியது. 

இலங்கை அணி இலக்கை நோக்கி ஒரு உதையை மாத்திரமே செலுத்தியது. எனினும் இலங்கை அணியால் 5 கோனர் கிக்குகளை பெற முடிந்ததோடு அதில் ஒன்று எதிரணிக்கு சவால் விடுப்பதாகவே இருந்தது.    

25 ஆவது நிமிடத்தில் நீண்ட தூரத்தில் சலனி ஏக்கனாயக்க மேற்கொண்ட கோல் முயற்சி பூட்டான் கோல்காப்பாளர் நிமா லிஹ்டனியினால் முறியடிக்கப்பட்டது. இது தவிர முதல் பாதி ஆட்டம் கோல் முயற்சிகள் இன்றி முடிவடைந்தது. 

இரண்டாவது பாதியில் இலங்கை வீராங்கனைகள் அதிக ஆக்கிரமிப்புடன் ஆடியதோடு மத்திய களத்தில் எரந்தி லியனகே, கே.பீ. குமுதுனி ஆக்ரோஷத்துடன் விளையாடியதோடு முன்களத்தில் சலனி ஏக்கனாயக்க மற்றும் பிரவீனா பெரேரா வேகமாக பந்தை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.   

எனினும் பின்கள வீராங்கனைகள் செய்த தவறினால் 65ஆவது நிமிடத்தில் எதிரணிக்கு கோல் வாய்ப்பு ஒன்று கிட்டியபோதும் அயோமி விஜேரத்ன சிறப்பாக தடுத்தார். கடைசி நிமிடங்களில் கோல் பெறுவதில் இரு அணிகளுக்கும் இழுபறி நீடித்தபோதும் எதுவித கோலும் பெறப்படவில்லை. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<