டுபாய் கிராண்ட் பிரிக்ஸில் முதலிடம் பிடித்த சமோத்; யுபுனுக்கு பின்னடைவு

Dubai Grand Prix 2025

140
Dubai Grand Prix 2025

டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் 2025 மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (09) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெற்றிகரமாக நிறைவடைந்தன. இந்தப் போட்டித் தொடரில் பங்குகொண்ட ஐந்து இலங்கை வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்மை குறிப்பிடத்தக்கது. 

ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியின் பிரிவு 1-இல் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட சம்பியனான யுபுன் அபேகோன் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார். காற்றின் உதவி இல்லாமலேயே, அவர் 10.39 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 5ஆவது இடத்தைப் பிடித்தார் 

இது அவரது சிறந்த தனிப்பட்ட சாதனைகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெய்வல்லுனர் போட்டிகளில் களமிறங்கி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொண்டார் 

இதற்கிடையில், ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியின் பிரிவு 2-இல் பங்கேற்ற சமோத் யோதசிங்க 10.27 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றார். 

ஆண்களுக்கான 100 மீட்டர் போட்டியில் 6 சுற்றுகள் நடைபெற்றன, மொத்தம் 44 வீரர்கள் பங்கேற்றனர். இதில் போட்டியின் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் சமோத் யோதசிங்க இரண்டாம் இடத்தையும், யுபுன் அபேகோன் ஆறாவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் 2025 மெய்வல்லுனர் போட்டிகளின் கடைசி போட்டி நிகழ்ச்சியாக ஆண்களுக்கான 4 × 100 மீற்றர் அஞ்சலோட்டம் நடைபெற்றது 

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி யுபுன் அபேகோன், சமோத் யோதசிங்க, மெரோன் விஜேசிங்க மற்றும் தெனெத் வீரரட்ன ஆகியோர் பங்குகொண்டனர். இதில் போட்டித் தூரத்தை 39.41 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை அணி 4ஆவது இடத்தைப் பிடித்தது 

>> மேலும்பலமெய்வல்லுனர்  செய்திகளைப்படிக்க <<