சர்வதேச லீக் T20 (ILT20) கிரிக்கெட் தொடரின் புதிய பருவத்திற்கான டுபாய் கெபிடல்ஸ் அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரரான தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார்.
>>ஆஷஷ் முதல் டெஸ்ட் ஆடுகளத்தின் தரம் குறித்த ஐசிசியின் அறிவிப்பு<<
அதன்படி இலங்கை T20 அணியின் தற்காலிக தலைவராக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் செயற்பட்டுவரும் ஷானக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) நடைபெறும் நான்காவது பருவத்திற்கான ILT20 தொடரில் டுபாய் கெபிடல்ஸ் அணியை வழிநடத்துவார்.
கடந்த பருவத்தில் டுபாய் கெபிடல்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தை வென்றதில் இவரின் பங்கு மிக முக்கியமானதாக காணப்பட்ட நிலையில் இம்முறை தலைவர் பதவி ஷானக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய தலைவர் பதவி குறித்து ஷானக கருத்து தெரிவிக்கையில், “டுபாய் கெபிடல்ஸ் அணியை வழிநடாத்துவது எனக்குக் கிடைத்த பெரிய கௌரவம். இந்த அணியின் மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை உள்ளது. எங்களுடைய அணி சமநிலையுடன், வெற்றிக்கான தாகத்துடன் உள்ளது. புதிய பருவத்தில் பயமற்ற கிரிக்கெட்டை விளையாடி எங்கள் இரசிகர்களைப் பெருமைப்படுத்துவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ILT20 தொடரின் புதிய பருவத்திற்கான போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் டிசம்பர் 2ஆம் திகதி தொடங்குகிறது. தொடரில் டுபாய் கெபிடல்ஸ் அணி தங்கள் முதல் போட்டியில் டெசர்ட் வைப்பர்ஸ் அணியை எதிர்கொள்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















