புதிய பருவத்திற்கான ஹொங்கொங் சிக்ஸ் தொடரில், இந்திய அணிக்காக விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்த்திக் விளையாடவிருக்கின்றார்.
>>T20I தரவரிசையில் முன்னேறிய பெதும்; முதல் 10 இடங்களில் இரு இலங்கை வீரர்கள்<<
முன்னதாக ILT20 தொடரில் ஷார்ஜா வோரியர்ஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகியிருந்த தினேஷ் கார்த்திக், ஹொங்கொங் சிக்ஸ் தொடரில் இந்திய தரப்பிற்காக ஆடுவது மாத்திரமின்றி அணியினையும் தலைவராக வழிநடாத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
முன்னதாக இந்திய அணிக்காக ஹொங்கொங் சிக்ஸ் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒப்பந்தமாகிய நிலையில், அவருடன் இணையும் அடுத்த தமிழ் நாட்டு வீரராகவும் தினேஷ் கார்த்திக் மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான ஹொங்கொங் சிக்ஸ் தொடரானது, நவம்பர் 7 தொடக்கம் 9 வரை இடம்பெறவிருப்பதோடு, இந்த தொடரில் இம்முறை 12 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்களில் பங்கெடுக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. அணிக்கு ஆறு வீரர்கள், ஆறு ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெறும் ஹொங்கொங் சிக்ஸ் தொடரில் மொத்தம் 29 அணிகள் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















