Home Tamil வனிந்து, மஹீஷின் அசத்தலுடன் ஜப்னா கிங்ஸிற்கு முதல் வெற்றி

வனிந்து, மஹீஷின் அசத்தலுடன் ஜப்னா கிங்ஸிற்கு முதல் வெற்றி

Lanka Premier League 2021

193

லங்கா பிரீமியர் லீக்கில் முதல் போட்டியின் தோல்வியுடன் இன்றைய தினம் (07) தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடிய ஜப்னா கிங்ஸ் அணி மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹஸரங்கவின் அபார பந்துவீச்சுடன் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி, நேற்றைய போட்டியில் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதும், இன்றைய தினம் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சரியாக முகங்கொடுக்க முடியாமல் 19.3 ஓவர்கள் நிறைவில் வெறும் 110 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

நெருக்கடிக்கு மத்தியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி LPL தொடரில் முதல் வெற்றி

கண்டி வொரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தம்புள்ள அணிக்கு மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த நிரோஷன் டிக்வெல்ல மற்றும் பில் சோல்ட் ஆகியோர் ஏமாற்றம் தந்திருந்தனர். முதல் நான்கு விக்கெட்டுகளும் 58 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட, நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க முற்பட்டனர்.

ஆனாலும், தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை சுரங்க லக்மால் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் வெளியேற்ற, முதல் போட்டியில் தடுமாறியிருந்த தம்புள்ள அணியின் மத்தியவரிசை வீரர்களை வெளியேற்றும் பணியை வனிந்து ஹஸரங்க மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் மேற்கொண்டனர்.

இளம் வீரர் நுவனிந்து பெர்னாண்டோ அதிகமாக 23 ஓட்டங்களை பெற, வனிந்துவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த சாமிக்க 18 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சுரங்க லக்மால் பவர் பிளே ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, மஹீஷ் தீக்ஷன இவருடன் இணைந்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர், வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

ஜப்னா கிங்ஸ் அணி எந்தவித அழுத்தமும் இன்றி களமிறங்கி துடுப்பெடுத்தாடிய நிலையில், இன்றைய தினம் அவர்களுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ரஹ்மதுல்லாஹ் குர்பாஸுடன், அவிஷ்க பெர்னாண்டோ களமிறங்கினார். குர்பாஸ், இம்ரான் தாஹீரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த போதும், கடந்த காலங்களில் சோபிக்க தவறிய அவிஷ்க பெர்னாண்டோ 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியுடன் 33 ஓட்டங்களை பெற்றார்.

நுவான் பிரதீப்பின் பந்துவீச்சில், அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழந்த போதும், டொம் கொலெர்-கெட்மோர் 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை இலகுவாக்கினார். அத்துடன், இம்முறை LPL தொடரில் முதன்முறையாக களமிறங்கிய சொஹைப் மலிக் 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 26 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஜப்னா கிங்ஸ் அணி இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

ஜப்னா கிங்ஸ் முதல் போட்டியில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதும், இந்த போட்டியில் வெறும் 12.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 114 ஓட்டங்களை பெற்று, 7 விக்கெட்டுக்களினால் வெற்றியினை உறுதிசெய்துக்கொண்டது.

அதுமாத்திரமின்றி புள்ளிப்பட்டியலில், இரண்டு புள்ளிகளை பெற்றுள்ள ஜப்னா கிங்ஸ் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், ஏனைய அணிகளான கோல் கிளேடியேட்டர்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிகளும் தலா 2 புள்ளிகளை பெற்றிருக்கின்றன. இதில், கண்டி வொரியர்ஸ் அணி மாத்திரம் ஒரு புள்ளியேனும் பெறவில்லை. இந்தநிலையில், கண்டி வொரியர்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது போட்டியில், இன்றைய தினம் (07) கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Result


Jaffna Kings
114/2 (12.3)

Dambulla Aura
110/10 (19.3)

Batsmen R B 4s 6s SR
Phil Salt c Wanindu Hasaranga b Mahesh Theekshana 13 12 1 0 108.33
Niroshan Dickwella c Wanindu Hasaranga b Suranga Lakmal 6 5 1 0 120.00
Lahiru Udara c Rahmanullah Gurbaz b Suranga Lakmal 3 7 0 0 42.86
Nuwanidu Fernando c Avishka Fernando b Jayden Seales 23 25 3 0 92.00
Dasun Shanaka c & b Mahesh Theekshana 13 17 1 0 76.47
Najibullah Zadran lbw b Mahesh Theekshana 0 3 0 0 0.00
Chamika Karunaratne c Rahmanullah Gurbaz b Wanindu Hasaranga 18 24 3 0 75.00
Ramesh Mendis c Wanindu Hasaranga b Suranga Lakmal 14 12 0 1 116.67
Marchant De Lange b Wanindu Hasaranga 13 8 0 1 162.50
Nuwan Pradeep not out 1 1 0 0 100.00
Imran Tahir b Jayden Seales 0 3 0 0 0.00


Extras 6 (b 0 , lb 4 , nb 0, w 2, pen 0)
Total 110/10 (19.3 Overs, RR: 5.64)
Fall of Wickets 1-14 (1.4) Niroshan Dickwella, 2-26 (3.5) Lahiru Udara, 3-26 (4.1) Phil Salt, 4-58 (9.3) Dasun Shanaka, 5-58 (9.6) Najibullah Zadran, 6-71 (13.1) Nuwanidu Fernando, 7-84 (16.1) Chamika Karunaratne, 8-109 (18.4) Ramesh Mendis, 9-109 (18.5) Marchant De Lange, 10-110 (19.3) Imran Tahir,

Bowling O M R W Econ
Mahesh Theekshana 4 1 22 3 5.50
Suranga Lakmal 4 0 28 2 7.00
Wanindu Hasaranga 4 0 16 3 4.00
Jayden Seales 3.3 0 23 2 6.97
Chathuranga de Sliva 4 0 17 0 4.25


Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Nuwan Pradeep b Imran Tahir 3 8 0 0 37.50
Avishka Fernando c & b Nuwan Pradeep 33 27 1 3 122.22
Tom Kohler-Cadmore not out 45 30 5 2 150.00
Shoaib Malik not out 26 10 0 3 260.00


Extras 7 (b 4 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 114/2 (12.3 Overs, RR: 9.12)
Fall of Wickets 1-13 (2.6) Rahmanullah Gurbaz, 2-76 (9.5) Avishka Fernando,

Bowling O M R W Econ
Imran Tahir 4 0 20 1 5.00
Marchant De Lange 2.3 0 21 0 9.13
Nuwan Pradeep 3 0 39 1 13.00
Ramesh Mendis 2 0 18 0 9.00
Chamika Karunaratne 1 0 12 0 12.00



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<