உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் தேசிய அணி வீரர்கள்

836

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் 2017/2018 பருவகாலத்துக்கான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரில் இன்றைய தினம் 11 போட்டிகள் நிறைவுக்கு வந்தன. இதில் NCC, SSC, தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம், சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், BRC, பாணந்துறை விளையாட்டுக் கழகம், செரசன்ஸ் விளையாட்டுக் கழகம், இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம், இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் மற்றும் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் ஆகியன வெற்றிகளைப் பதிவு செய்தன.

இதில், திமுத் கருணாரத்ன(132), ரமித் ரம்புக்வெல்ல(102), மஹேல உடவத்த(109), அதீஷ நாணயக்கார(131) மற்றும் BRC கழகத்தைச் சேர்ந்த 22 வயதுடைய வலதுகை இளம் துடுப்பாட்ட வீரரான லிசுல லக்‌ஷான்(107) ஆகிய வீரர்கள் சதங்களை குவித்திருந்ததுடன், இலங்கை அணியின் அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளரான தம்மிக பிரசாத் முதல்தர போட்டிகளில் தனது கன்னி அரைச்சதத்தையும் பூர்த்தி செய்திருந்தார்.

பந்துவீச்சில் குருநாகல் அணியின் கல்ஹான் சினெத், இலங்கை விமானப்படையின் சொஹான் ரங்கிக, பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் துலஞ்சன செனவிரத்ன மற்றும் கொழும்பு அணியின் வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் தலா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

NCC எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக்கவில் நடைபெற்ற இப்போட்டியில் மஹேல உடவத்தவின் சதம் மற்றும் அஞ்செலோ பெரேராவின் அரைச்சதத்தின் உதவியுடன் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை 180 ஓட்டங்களால் NCC அணி வீழ்த்தியது.

உள்ளுர் போட்டிகளில் தொடர்ந்து கலக்கும் மாலிங்கவின் மற்றுமொரு மைல்கல்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தனது….

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற NCC அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதில் NCC அணிக்கு முன்வரிசை வீரர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பினை வழங்க, அவ்வணி 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

NCC அணிக்காக மஹேல உடவத்த, 116 பந்துகளுக்கு முகங்கொடுத்து 109 ஓட்டங்களையும், அஞ்செலோ பெரேரா 75 பந்துகளுக்கு முகங்கொடுத்து 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து வலுச்சேர்த்திருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் ஆரம்பம் முதலே தடுமாற்றத்தினை சந்திக்க, 111 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணிக்காக விளையாடிய அனுபவமிக்க இளம் வேகப்பந்துவீச்சாளரான லஹிரு குமார 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

NCC – 291/8 (50) – மஹேல உடவத்த 109, அஞ்செலோ பெரேரா 83, லஹிரு உதார 44, சந்துன் வீரக்கொடி 23, மஹேஷ் பிரியதர்ஷன 4/64, புத்திக சஞ்சீவ 3/49

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 111 (23.4) – சச்சித ஜயதிலக்க 36, மஹேஷ் பிரியதர்ஷன 35, லஹிரு குமார 4/24, தரிந்து கௌஷால் 2/05, லசித் அம்புல்தெனிய 2/17, நுவன் கருணாரத்ன 2/30

முடிவு NCC அணி 180 ஓட்டங்களால் வெற்றி


SSC எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

A குழுவுக்காக நடைபெற்ற இப்போட்டியில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தை எதிர்கொண்ட SSC கழகம் 142 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

குருநாகல் வெலகெதர மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குருநாகல் அணியினர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தனர்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய SSC அணி, திமுத் கருணாரத்னவின்(132) சதம் மற்றும் தம்மிக பிரசாத்தின்(50) அரைச்சதத்தின் உதவியுடன் 40.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இம்முறை உள்ளூர் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அசத்தி வரும் திமுத் கருணாரத்ன கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளிலும் 64, 65 ஓட்டங்கள் என அரைச்சதங்களைக் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உபாதைகளுக்குப் பிறகு மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகின்ற தம்மிக பிரசாத், 2 சிக்ஸ்ரகள் 4 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 55 பந்துகளில் அரைச்சதம் கடந்து முதல்தரப் போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதத்தையும் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் குருநாகல் அணியின் வலதுகை சுழல் பந்துவீச்சாளரான கல்ஹான் சினெத் 5 விக்கெட்டுக்களை பதம்பார்த்தார்.

சுதந்திர கிண்ண டி20 இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ்

இலங்கையுடனான சுதந்திர கிண்ண டி20 முத்தரப்பு தொடரின் பரபரப்பான…

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், 31.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

போட்டியின் சுருக்கம்

SSC – 275 (40.5) – திமுத் கருணாரத்ன 132, தம்மிக பிரசாத் 50, சாமர கபுகெதர 27, கல்ஹான் சினெத் 5/43, கேஷான் விஜேரத்ன 2/64

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 133 (31.4) – சரித் மெண்டிஸ் 53, தனுஷ்க தர்மசிறி 32, சச்சித்ர சேனநாயக்க 3/38, சரித் அசலங்க 3/12

முடிவு SSC கழகம் 142 ஓட்டங்களால் வெற்றி


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

கம்பஹா கதிரான கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு அணி, ஆரம்பம் முதல் ஓட்டங்கள் சேர்க்க சிரமப்பட்டதுடன், 46.3 ஓவர்களில் 156 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தது.

தமிழ் யூனியன் அணியின் பந்துவீச்சு சார்பாக பிரமோத் மதுஷான் மற்றும் தினுக் விக்ரமநாயக்க தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் இலகு வெற்றி இலக்கான 157 ஓட்டங்களை நோக்கி துடுப்பாட களமிறங்கிய தமிழ் யூனியன் அணியினர், ரமித் ரம்புக்வெல்லவின் அதிரடி சதத்தோடு 21ஆவது ஓவரிலேயே வெற்றியைப் பெற்றுக்கொண்டனர்.

இதில் 55 பந்துகளுக்கு முகங்கொடுத்த ரம்புக்வெல்ல, 5 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் உள்ளடங்கலாக அதிரடியாக 102 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 156 (46.3) – டிலஸ்ரீ லொகுபண்டார 42, ரவிந்திர கருணாரத்ன 24, சந்துன் டயஸ் 23, பிரமோத் மதுஷான் 3/26, தினுக் விக்ரமநாயக்க 3/28, துலான்ஜன மெண்டிஸ் 2/23

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 159/2 (20.1) – ரமித் ரம்புக்வெல்ல 102, தரங்க பரணவிதாரன 25

முடிவு தமிழ் யூனியன் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி

ஏனைய போட்டிகளின் முடிவுகள்…

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 176 (45.3) – வனிந்து ஹசரங்க 53, மாதவ வர்ணபுர 46, டில்ஷான் முனவீர 28, சொஹான் ரங்கிக 5/23, புத்திக சந்தருவன் 3/30

இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் – 180/9 (41.4) – சொஹான் ரங்கிக 41, ரங்க திஸாநாயக்க 34, வனிந்து ஹசரங்க 5/21, க்‌ஷான் சந்தகன் 3/45

முடிவு இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் ஒரு விக்கெட்டால் வெற்றி

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 260/8 (50) – அதீஷ நாணயக்கார 131, நிபுன் கருணாநாயக்க 29, திரான் தனபால 21, ஷான் ஜயரத்ன 3/60, உதார ஜயசுந்தர 2/47

ராகம கிரிக்கெட் கழகம் – 248/9 (48.4) – லஹிரு மிலந்த 56, சமிந்த பெர்னாண்டோ 51, ரொஷேன் சில்வா 44, மலித் டி சில்வா 2/33, கசுன் ராஜித 2/53

முடிவு ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 12 ஓட்டங்களால் வெற்றி

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 270/8 (50) – கசுன் விதுர 77, சச்சித்ர சேரசிங்க 67, திக்‌ஷில் டி சில்வா 33, ரோஹித் தமோதரன் 24, நுவன் லியனபதிரன 2/24, அஜந்த மெண்டிஸ் 2/44

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 190 (38.1) – க்‌ஷித மதுஷான் 38, அஜந்த மெண்டிஸ் 36, சீக்குகே பிரசன்ன 27, ஜனித் சில்வா 24, ஷான் ந்திக 25, அசித பெர்னாண்டோ 4/14, ராய்ப்பி கோமஸ் 2/41, டில்ஷான் குணவர்தன 2/37

முடிவு சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 80 ஓட்டங்களால் வெற்றி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்…

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் BRC

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 216/9 (50) – பெதும் நிஸ்ஸங்க 50, நதீர நாவெல 44, அலங்கார அசங்க சில்வா 33*, சாரங்க ராஜகுரு 31, டில்ஹான் குரே 29, ஹிமேஷ் ராமநாயக்க 3/52, சாமிகர எதிரிசிங்க 2/38, சுராஜ் ந்திவ் 2/44

BRC – 217/3 (37.1) – லிசுல க்‌ஷான் 107, லசித் க்‌ஷான் 42, டேஷான் டயஸ் 35

முடிவு BRC கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 213/9 (50) – வினோத் பெரேரா 55, தரிந்து மதுரங்க 37, கீஷான் விமலதர்ம 26, அரவிந்த பிரேமரத்ன 20*, ரமேஷ் நிமந்த 2/29, சரித் ஜயம்பதி 2/32

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் – 191 (43.3) – கிஹான் ரூபசிங்க 54, யொஹான் டி சில்வா 48, துலஞ்சன செனவிரத்ன 5/64, அரவிந்த பிரேமரத்ன 3/27, வினோத் பெரேரா 2/32

முடிவு பாணந்துறை விளையாட்டுக் கழகம் 22 ஓட்டங்களால் வெற்றி

 சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

சோனகர் விளையாட்டுக் கழகம் – 220/9 (50)இரோஷ் சமரசூரிய 68, திலக்ஷ சுமனசிறி 51, சரித்த குமாரசிங்க 22, கோஷல குலசேகர 21, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/38, அன்டி சொலமன்ஸ் 2/44, சாலிய சமன் 2/50

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 221/5 (46) – கமிந்து கனிஷ்க 61, ருவிந்து குணசேகர 52, அஷேன் பண்டார 46, ஹர்ஷ குரே 29, சஜீவ வீரகோன் 2/38

முடிவு செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்

களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் – 193 (50) – டேவின்ட் பத்மநாதன் 46, எம். நிமேஷ் 32, கிறிஷேன் அபோன்சோ 23, எரங்க ரத்னாயக்க 22, நுவன் சம்பத் 4/32, குசல் எடுசூரிய 2/23

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் – 197/5 (47.5) – குசல் எடுசூரிய 71, தரூஷன் த்தமல்கொட 58, க்‌ஷான் ஜயசிங்க 2/33, மதீஷ பெரேரா 2/41

முடிவு இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி