காலிறுதியில் அயர்லாந்தை நொறுக்கியது பிரான்ஸ்

267
France 5-2 Iceland Euro
@Reuters

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு செயின்ட் டெனிஸ் நகரில் நடைபெற்ற கடைசி காலிறுதியில் போட்டியில் பிரான்ஸ், ஐஸ்லாந்து அணியை எதிர்த்து விளையாடின.

பலம் வாய்ந்த இரு அணியினரும் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராடினர்.

ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்திலேயே பிரான்ஸ் அணியின் கிரைவுட் முதல் கோலை அடித்து கணக்கை துவங்கி வைத்தார். இதனையடுத்து 20, 43, 45 ஆகிய நிமிடங்களில் பிரான்ஸ் அடுத்தடுத்து கோல்களை அடித்தது. இதனால் முதல் பாதி முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நான்கு கோல்கள் அடித்து வலிமையான நிலையில் இருந்த பிரான்ஸ் அணிக்கு நெருக்கடி தர முயன்றது ஐஸ்லாந்து அணி.. அதன் பிரதிபலனாக  56ஆவது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணியின் சிக்தோர்சன் தங்களது அணியின் முதல் கோலை அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். ஆனால் 59ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி மீண்டும் ஒரு கோல் அடித்து ஐஸ்லாந்து அணியை அச்சுறுத்தியது.

பின் இறுதியில் போட்டி  முழு நேர  முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை யூரோ கிண்ணக் கால்பந்து தொடரில் 3ஆவது காலிறுதிப் போட்டி

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் FIFA கால்பந்தாட்ட கிண்ண நடப்புச் சம்பியன் ஜெர்மனி மற்றும் இத்தாலி அணிகள் மோதின.

இப்போட்டியில் ஜெர்மனி பெனால்டி முறையில் 6-5 என்ற கோல்கள் கணக்கில் இத்தாலியை  வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆனால் முதல் பாதியில் இரு அணி வீரர்களாலும் கோல்களைப் போட முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் போட்டி 0-0 என்ற நிலையில் இருந்தது.

2ஆவது பாதி ஆட்டம் தொடர்ந்தது. முதல் பாதி போன்றே இரண்டு அணி வீரர்களும் கோல் ஒன்றைப் போடும் முயற்சியில் விளையாடினர். அந்த முயற்சியின் பலன் ஜெர்மனிக்கு பழிக்க அந்த அணியின் ஒசீல் போட்டியின் 65ஆவது நிமிடத்தில் ஜெர்மனி  அணி சார்பாக முதல் கோலைப் போட்டார். அவர் கோல் போட்டு 12 நிமிடங்கள் செல்ல இத்தாலி அணியின் முயற்சியும் வீணாகமல் செல்ல போட்டியின் 77ஆவது நிமிடத்தில் பௌஞ்சி இத்தாலி அணி சார்பாக முதல் கோலைப் போட்டார்.  இதன் பின் போட்டியின் முழு நேர முடிவு வரை இரு அணிகளும் வெற்றி கோலைப் போட முயன்றாலும் முயற்சி பயனளிக்கவில்லை. இதன் பின் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரண்டு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. இதனால் பெனால்டி முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் ஜெர்மனி அணி 6-5 என்ற  கோல்கள்  கணக்கில் இத்தாலியை  வீழ்த்தி 2016ஆம் ஆண்டு யூரோ கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.

அந்த அடிப்படையில்  பிரான்ஸ் அணி வரும் ஜூலை 8ஆம்  திகதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியுடம் மோதுகின்றது. 6ஆம்  திகதி   நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் போர்த்துக்கல்  மற்றும் வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்