இலங்கை டெஸ்ட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டில்ருவன் பெரேரா, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுக்களையும் 7,000 ஓட்டங்களையும் பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
டெஸ்ட் தரவரிசையில் அதிரடி மாற்றங்கள் : சந்திமால் மேலும் முன்னேற்றம்
தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதிய…
டெஸ்ட் அரங்கில் இலங்கை சார்பாக அதிவேகமாக 100 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டவராக டில்ருவன் பெரேரா உள்ளார். அதேபோன்று அவர் முதல்தரப் போட்டிகளில் 700 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய 6ஆவது இலங்கை வீரராக இடம்பிடித்ததுடன், முதல்தரப் போட்டிகளில் 7,000 ஓட்டங்களைக் கடந்து 700 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய இலங்கையின் முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் இந்த பருவத்திற்கான உள்ளூர் பிரீமியர் லீக் ஏ நிலை கிரிக்கெட் தொடரில் கோல்ட்ஸ் கழக அணியின் தலைவராக செயற்படும் டில்ருவன் பெரேரா, செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்துடன் நிறைவுக்கு வந்த 3 நாள் கொண்ட போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தனது 36ஆவது 5 விக்கெட் பிரதியையும் பூர்த்தி செய்து 700 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
இதுவரை 195 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள 35 வயதான டில்ருவன் பெரேரா, 25 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். அத்துடன் முதல்தரப் போட்டிகளில் 7,204 ஓட்டங்களைக் குவித்துள்ள அவர், சர்வதேச டெஸ்டில் 845 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க 39 இலங்கை வீரர்கள் விண்ணப்பம்
11ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் – மே…
இதற்கு முன்னதாக சமிந்த வாஸ், 6,223 ஓட்டங்களுக்கு 700 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை சாதனையாக இருந்தது.
இந்நிலையில், இலங்கை சார்பாக அதிக முதல்தர விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களுக்கான பட்டியலில் முத்தையா முரளிதரன் (1,374 விக்கெட்), ரங்கன ஹேரத்(1,042 விக்கெட்), தினுக் ஹெட்டியாரச்சி(929 விக்கெட்), சஜீவ வீரகோன்(811 விக்கெட்), சமிந்த வாஸ்(772 விக்கெட்), ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான இப்போட்டியில் கோல்ட்ஸ் கழகம் 226 ஓட்டங்களால் வெற்றியீட்டி, இப்பருவகாலத்தில் தமது முதலாவது வெற்றியை அவ்வணி பதிவுசெய்தது.




















