SABA சவாலுக்காக பங்களாதேஷ் செல்லும் நடப்பு சம்பியன் இலங்கை!

South Asian Basketball Association Championship 2021

98
South Asian Basketball Association Championship 2021

தெற்காசிய கூடைப்பந்து சம்மேள சம்பியன்ஷிப் தொடரில் (SABA) பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் அனுசரணையாளர்களாக வெலோனா (Velona), மாஸ் (MAS) மற்றும் விராஜ் பிட்னஸ் (Vaaj Fitness) ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன.

நடப்பு சம்பியனான இலங்கை, தெற்காசிய கூடைப்பந்து சம்மேள சம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் சென்றடைந்துள்ளது. அதேநேரம், போட்டிகள் இன்றைய தினம் (15) ஆரம்பமாகின்றன. இலங்கை குழாமானது, கடந்த ஒருமாத காலமாக உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தது.

>> அரையிறுதிக்கு முன் ICU இல் சிகிச்சை பெற்ற ரிஸ்வான்

வெலோனா (Velona), மற்றும் விராஜ் பிட்னஸ் (Vaaj Fitness) இலங்கை அணிக்கு அனுசரணையாளர்களாக பலம் சேர்ப்பதுடன், பிரபல ஆடை உற்பத்தி நிறுவனமான மாஸ் ஹோல்டிங்ஸ் (MAS), அணிக்கான ஆடை பங்குதாரராக இணைந்துக்கொண்டுள்ளனர்.

அதேநேரம், குறித்த இந்த தொடர் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தில் செயலாளர் சந்ரசேன லியனகே குறிப்பிடுகையில், “நாம் இலங்கையில் கூடைப்பந்தாட்டத்தை பாரிய முக்கியத்துவத்துடன் பார்க்கவில்லை. ஆனால், கூடைப்பந்தாட்டத்தை அடுத்த மட்டத்துக்க கொண்டு சென்றுள்ளோம். நாம் புதிய பார்வையுடன் நகர்வதுடன், சர்வதேச கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆசிய தகுதிகாண் தொடரை எட்டும் நோக்குடன் எமது பயணத்தை தொடங்கியுள்ளோம்” என்றார்.

அதேநேரம், இலங்கை அணிக்கான விளையாட்டு ஜேர்சிகள், பயண ஆடைகள் போன்றவை அணுசரணையாளர்கள் மற்றும் இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் எலியன் குணவர்தனவால் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ள குழாத்தின் மேலதிக வீரர்களில் ஒருவராக, யாழ். ஏஞ்சல் சர்வதேச பாடசாலையின் யோகனமதன் ஷிம்ரொன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

கிளிண்டன் ஸ்டெல்லோன் (தலைவர்), ருக்ஷான் அதபத்து (உப தலைவர்), கயான் டி குரூஸ், திமோதி நிதுஷன், பிரனீத் உடுமலகல, சானுக பெர்னாண்டோ, அர்னோல்ட் பிரெண்ட், உதயங்கர பெரேரா, தசுன் நிலந்த மெண்டிஸ், பவன் கமகே, நிமேஷ் பெர்னாண்டோ, அசங்க மஹேஸ் ராஜகருண

மேலதிக வீரர்கள் – சசிந்து கஜநாயக்க, யோகனமதன் ஷிம்ரொன், செரான் பெர்னாண்டோ

>> மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க <<