ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025: இறுதிப் போட்டி திகதிகள் அறிவிப்பு

67

அடுத்த ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் இடம் தொடர்பிலும், அதற்கான காலப்பகுதி தொடர்பிலும் முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.  

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தம் அறிவிப்பு!

அந்தவகையில் .சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி 2025ஆம் ஆண்டின் ஜூன் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை, லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது 

அத்துடன் மழை நிலைமைகளைக் கருத்திற் கொண்டு தொடரின் இறுதிப் போட்டிக்காக மேலதிக நாளாக ஜூன் 16ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது 

அத்துடன் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அதிக வாய்ப்பினைக் கொண்ட நாடுகளாக இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா காணப்படுவதோடு தற்போதைய .சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் அடிப்படையில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன 

.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் நடப்புச் சம்பியன்களாக அவுஸ்திரேலியா காணப்படுவதோடு, இறுதிப் போட்டியின் டிக்கட் விற்பனை பதிவுகளும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<