IPL தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்க அணியின் இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர் குர்ஜப்னீட் சிங் உபாதை காரணமாக முழுமையான IPL தொடரிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
>>பங்களாதேஷ் உடன் ஆடும் இலங்கை U19 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு<<
இந்தநிலையில் அவருக்கு பதிலாக டெவால்ட் பிரேவிஸ் வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கான அடிப்படை தொகை 75 இலட்சமாக (இந்திய ரூபாய்) இருந்த போதும், 2.2 கோடி ரூபாவுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இவரை ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
டெவால்ட் பிரேவிஸ் இதற்கு முதல் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடியிருந்தார் என்பதுடன், இறுதியாக நடைபெற்ற SA T20 தொடரிலும் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்தார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை ஏற்கனவே அணித்தலைவர் ருதுராஜ் கைக்வாட்டிற்கு பதிலாக இளம் வீரர் ஆயுஸ் மாத்ரேவை ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<