உருகுவே வெளியேறியது; காலிறுதியில் மெக்சிகோ, வெனிசுலா

270
Matias Vecino, Carlos Sanchez, Jose Gimenez, Enrique Caceres
(AP Photo/Ross D. Franklin)

45ஆவது  கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் இன்று காலை நடந்த போட்டிகளில் உருகுவே மற்றும் ஜமைக்கா ஆகிய இரு அணிகளும் வெளியேற்றப்பட்டு காலிறுதிக்கு மெக்சிகோ மற்றும் வெனிசுலா தகுதி பெற்றுள்ளது.

இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் உருகுவேவெனிசுலா (‘சிபிரிவு) அணிகள் மோதின. உருகுவே அணியில் நட்சத்திர வீரர் சுராஸ் ஆடவில்லை. பலம் வாய்ந்த உருகுவே அணிக்கு வெனிசுலா வீரர்கள் நன்கு ஈடுகொடுத்து விளையாடினர்.

36ஆவது நிமிடத்தில் வெனிசுலா வீரர் ரோன்டன் கோல் அடித்து உருகுவே அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2ஆவது பாதியில் பதில் கோல் அடிக்க உருகுவே போராடியது. ஆனால் அந்த அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.

பிரேசிலிற்கு பாரிய வெற்றி

முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலா வென்றது. இது வெனிசுலா அணி பெற்ற 2ஆவது வெற்றியாகும். இதன் மூலம் கால் இறுதிக்குத் தகுதி பெற்றது.

உருகுவே அணி 2ஆவது தோல்வியைச் சந்தித்தது. ஏற்கனவே மெக்சிகோவிடம் தோற்றது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோஜமைக்கா மோதின. இதில் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2ஆவது வெற்றி பெற்ற மெக்சிகோவும் கால் இறுதிக்குள் நுழைந்தது.

2 தோல்வியை சந்தித்த முன்னணி அணியான உருகுவே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதே போல் ஜமைக்காவும் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்