Home Tamil கென்ய மகளிர் கிரிக்கெட் அணியினை இலகுவாக வீழ்த்திய இலங்கை

கென்ய மகளிர் கிரிக்கெட் அணியினை இலகுவாக வீழ்த்திய இலங்கை

296

பொதுநலவாய விளையாட்டு விழாவின் T20 கிரிக்கெட் தொடருக்குரிய அணிகளை தெரிவு செய்கின்ற தகுதிகாண் போட்டியில் இன்று (20) கென்யாவினை எதிர்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>>இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலகு வெற்றி

அத்துடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்த வெற்றியுடன் தகுதிகாண் போட்டிகளில் இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்து முன்னேறுகின்றது.

கோலாலம்பூரில் இன்று (20) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் கென்ய அணியினை துடுப்பாடப் பணித்திருந்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கென்ய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் மந்த கதியில் ஓட்டங்களை குவித்திருந்தததோடு 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

கென்ய மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் குயின்டர் ஏபல் 33 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்களை எடுக்க, இலங்கைத் தரப்பின் பந்துவீச்சில் இனோகா ரணவீர, சச்சினி நிசன்ஷல, கவிஷ டில்ஹாரி மற்றும் இலங்கை மகளிர் அணித்தலைவர் சமரி அத்தபத்து ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 88 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, குறித்த வெற்றி இலக்கினை 9.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 93 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தொடர்ச்சியாக இரண்டாவது அரைச்சதம் விளாசியிருந்த சமரி அத்தபத்து வெறும் 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை குவித்து தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

>>பொதுநலவாய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் தகுதிகாண் தொடர் மலேசியாவில்

அதோடு சமரி அத்தபத்து போட்டியின் ஆட்டநாயகி விருதினையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியினை அடுத்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, இந்த தகுதிகாண் தொடரில் எதிர்வரும் சனிக்கிழமை (22) மலேசியாவினை எதிர்கொள்ளவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

கென்ய மகளிர் அணி –  87/6 (20) குயின்டோர் ஏபல் 33, கவிஷ டில்ஹாரி 11/1 (4)

இலங்கை மகளிர் அணி – 89/1 (9.3) சமரி அத்தபத்து 57

முடிவு – இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<


Result


Sri Lanka Women
89/1 (9.3)

Kenya Women
87/6 (20)

Batsmen R B 4s 6s SR
Queentor Abel lbw b Chamari Athapaththu 33 53 6 0 62.26
Mary Mwangi run out () 1 8 0 0 12.50
Margaret Ngoche lbw b Inoka Ranaweera 2 3 0 0 66.67
Sharon Juma run out () 1 6 0 0 16.67
Sarah Wetoto c Ama Kanchana b Kavisha Dilhari 29 31 3 1 93.55
Monicah Ndhambi not out 0 0 0 0 0.00
Daisy Njoroge b Sachini Nisansala 1 3 0 0 33.33
Venasa Ooko not out 5 48 0 0 10.42
Esther Wachira not out 1 1 0 0 100.00


Extras 14 (b 0 , lb 2 , nb 0, w 12, pen 0)
Total 87/6 (20 Overs, RR: 4.35)
Bowling O M R W Econ
Tharika Sewwandi 2 0 10 0 5.00
Ama Kanchana 3 0 13 0 4.33
Inoka Ranaweera 3 0 15 1 5.00
Sachini Nisansala 4 0 25 1 6.25
Kavisha Dilhari 4 1 11 1 2.75
Nilakshi de Silva 1 0 1 0 1.00
Chamari Athapaththu 3 0 10 1 3.33


Batsmen R B 4s 6s SR
Vishmi Rajapaksha not out 26 26 3 0 100.00
Chamari Athapaththu st Ruth Achando b Esther Wachira 57 29 8 3 196.55
Hasini Perera not out 0 2 0 0 0.00


Extras 6 (b 0 , lb 0 , nb 0, w 6, pen 0)
Total 89/1 (9.3 Overs, RR: 9.37)
Bowling O M R W Econ
Lavendah Idambo 2 0 16 0 8.00
Mercyline Ochieng 2 0 19 0 9.50
Queentor Abel 2 0 10 0 5.00
Mary Mwangi 1 0 16 0 16.00
Sarah Wetoto 1 0 18 0 18.00
Esther Wachira 1 0 4 1 4.00
Daisy Njoroge 0.3 0 6 0 20.00