ஆடவர் கிரிக்கெட்டில் வரலாற்று பெயர் பதித்த பெண் நடுவர்

191
Photo Courtesy - Cricket Australia

அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 31 வயதுடைய க்ளையர் பொலோசக் என்ற பெண் நடுவர் ஆடவருக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராக கடமையாற்றி, ஆடவர் போட்டியில் கடமையாற்றிய முதல் பெண் நடுவர் என்ற வரலாற்று பெருமையை பெற்றுள்ளார்.  

பிக்பேஷ் தொடரிலிருந்து ஓயும் அவுஸ்திரேலிய சகலதுறை நட்சத்திரம்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை…..

கிரிக்கெட் விளையாட்டானது ஆண், பெண் ஆகிய இருபாலாரினாலும் விளையாடப்படும் ஒரு விளையாட்டாகும். ஆரம்பத்தில் ஆண்களினால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விளையாட்டானது காலப்போக்கில் மகளிரினாலும் விளையாடப்பட்டு வந்தது. இதில் இரு பாலாருக்கும் நடுவர்களாக பெரும்பாலும் ஆண்களே செயற்பட்டு வந்தனர்.  

காலப்போக்கில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டி தொடர்களின் நடுவர்கள் வரிசையில் பெண்களின் பிரவேசமும் உருவெடுக்க தொடங்கியது. இவ்வாறு தொடர்ந்துவந்த நிலையில் தற்போது ஆடவர் கிரிக்கெட்டிலும் பெண் நடுவர்களின் ஆதிக்கம் பிரவேசித்துள்ளது.  

இதுவரை காலமும் ஆடவர் கிரிக்கெட்டில் ஆண்களே நடுவர்களாக செயற்பட்டுவந்தனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடாத்தப்பட்ட உலக கிரிக்கெட் லீக் தொடரின் பிரிவு இரண்டுக்கான  ஓமான் மற்றும் நமீபியா அணிகளுக்கிடையில் நேற்று (27) நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த க்ளையர் பொலோசக் என்ற பெண், நடுவராக கடமையாற்றி ஆடவர் கிரிக்கெட்டில் நடுவராக செயற்பட்ட முதல் பெண் நடுவர் என்ற வரலாற்று பெருமையை பெற்றுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரை சுழல் பந்துவீச்சாளராக மாற்றிய சனத் ஜயசூரிய

இலங்கை அணியும், இந்திய அணியும் 1996ஆம் ஆண்டின்…..

1988 ஏப்ரல் 7ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் பிறந்த க்ளையர் பொலோசக் 2015 டிசம்பர் 5ஆம் திகதி அவரது 27ஆவது வயதில் மகளிருக்கான .சி.சி டி20 தொடரின் தகுதிகான் தொடரின் பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் நடுவராக முதல்முறை செயற்பட்டிருந்தார்.  

பின்னர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான டி20 உலகக் கிண்ண தொடரில் நடுவராக செயற்பட்டார். 2017 ஒக்டோபரில் ஆண்களுக்கான உள்ளூர் போட்டியில் முதல் பெண் நடுவராக செயற்பட்டு அந்த வரலாற்றிலும் பெயர்பதித்தார். அதன் பின்னர் இறுதியாக தற்போது ஆடவர் சர்வதேச போட்டியிலும் முதல் பெண் நடுவர் என்ற பெயரையும் பதித்துள்ளார்.  

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் குறித்து க்ளையர் பொலோசக் கருத்து வெளியிடுகையில்,  ‘ஆடவர் கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றுவது மிகவும் பெருமையாக இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக காணப்படும் பல்வேறு தடைகளை உடைப்பதற்கான ஒரு நிகழ்வாக  இத்தருணம் அமைந்திருக்கும். இதனால் பெண்கள் அதிகளவில் இந்த துறை நோக்கி வருவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். என்னைப்போன்று இன்னும் பல பெண் நடுவர்கள் வரவேண்டுமென விரும்புகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<