இம்மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும், இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
>> IPL ஏலத்தில் விலைபோகாத இலங்கை வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த அவுஸ்திரேலியாவின் டேவிட் சேக்கர், சொந்தக் காரணங்கள் கருதி தனது பதவியினை நேற்று (19) இராஜினாமா செய்திருந்தார்.
எனவே, டேவிட் சேக்கரின் இடத்தினை நிரப்பும் முகமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளரான சமிந்த வாஸ் புதிய வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இலங்கை அணிக்காக பணிபுரிந்திருக்கும் சமிந்த வாஸின் புதிய நியமனம் தற்காலிமானது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான மேற்கிந்திய தீவுகளின் ஆடுகளங்களில் அவர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இருதரப்பு தொடர், மார்ச் மாதம் 03ஆம் திகதி நடைபெறவுள்ள 03 போட்டிகள் கொண்ட T20 தொடருடன் ஆரம்பமாகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<




















