கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இணையும் துஷ்மன்த சமீர

343

இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீரவினை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 2024ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடருக்காக ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>ஆப்கான் தொடரிலிருந்து விலகும் துஷ்மந்த சமீர?

அந்தவகையில் துஷ்மன்த சமீர கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக காணப்பட்ட கஸ் அட்கின்ஸனை பிரதியீடு செய்வதன் மூலமே 2024ஆம் ஆண்டுக்கான IPL தொடருக்காக ஒப்பந்தமாகியிருக்கின்றார்.

துஷ்மன்த சமீர தொடர்பில் IPL நிர்வாகம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் அவர் தனது அடிப்படை ஏல நிர்ணயத் தொகைக்கு (இந்திய நாணயப்படி ரூபா. 50 இலட்சத்திற்கு) கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியினால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துஷ்மன்த சமீர இந்த ஆண்டுக்கான IPL தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுத்த போதிலும் எந்த அணி மூலமும் கொள்வளனவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேவேளை இடதுகை வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீர ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணிகளுக்காக இதற்கு முன்னர் IPL போட்டிகளில் ஆடியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தசை உபாதையில் இருந்து மீண்டு வரும் துஷ்மன்த சமீர இறுதியாக இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் பங்கேற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<