மூன்றாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம்

163

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரிவு – I முதல்தரக் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருந்த நான்கு நாட்கள் கொண்ட (Tier A) மேஜர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், நேற்று (10) முடிவடைந்த சுபர் 8 சுற்றுடன் நிறைவுக்கு வந்தது.   

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் தமிழ் யூனியன், இராணுவ கழகங்கள்

இலங்கை கிரிக்கெட் சபையின் கழகங்களுக்கு இடையிலான…….

கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்றிருந்த இத்தொடரில் ஏற்கனவே நடைபெற்ற போட்டிகள் மூலம் மொத்தமாக 88 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) மூன்றாவது தடவையாக சம்பியனாக நாமம் சூடியது.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இப்போட்டியில் தேசிய அணி வீரர் அசேல குணரத்ன இராணுவப்படை தரப்பிற்காக போராடி சதம் ஒன்றை பெற்றுத்தந்த போதிலும், இராணுவப்படை விளையாட்டுக் கழகம் கோல்ட்ஸ் கிரிக்கெட் அணியுடன் 10 விக்கெட்டுகளால் தோல்வியினை தழுவியது.

Photos: Colts CC Vs Army SC | Major Super 8s Tournament 2018/ 19

இதேநேரம், இராணுவப்படை விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்திய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் தொடரில் 4ஆவது இடத்தைப் பெற்ற அணியாக மாறியது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 574/9d (148.1) தனன்ஞய லக்ஷான் 141, பிரியமல் பெரேரா 127, விசாத் ரன்திக்க 106, அவிஷ்க பெர்னாந்து 75, நிசால தாரக்க 55, அசேல குணரத்ன 2/40, நுவான் லியானபத்திரன 2/67

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 168 (48.5) ஹிமாஷ லியனகே 46, நளின் பிரியதர்ஷன 4/32

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) (f/o) – 446 (108) தில்ஷான் டி சொய்ஸா 139, அசேல குணரத்ன 123, ஹிமாஷ லியனகே 48, நிசால தாரக்க 3/74

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 41/0 (0) பிரியாமல் பெரேரா 29*

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 10 விக்கெட்டுகளால் வெற்றி  


தமிழ் யூனியன் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் தமிழ் யூனியன் அணிகள் இடையில் நடைபெற்ற இந்தப் போட்டி சமநிலையில் முடிவடைய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் வெற்றியாளராக மாறியது.

இலங்கையின் ஓட்ட இயந்திரமாக உருவெடுத்து வரும் பெதும் நிஸ்ஸங்க

அண்மைக் காலமாக இலங்கை அணி பெற்றுக்கொண்ட தொடர்….

மேலும், இப்போட்டியில் பெற்றுக் கொண்ட முதல் இன்னிங்ஸ் வெற்றியினால் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் மேஜர் ப்ரீமியர் லீக் தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற அணியாகவும் மாறியது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் (முதல் இன்னிங்ஸ்) – 330 (101.4) மனோஜ் சேரசந்திர 68, சிதார கிம்ஹான் 52, கமிந்து கனிஷ்க 3/74

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 574/9d ப்ரமோத் மதுவன்த 212, நிப்புன் கருணாநாயக்க 149, அஷான் பண்டார 94, ரமித் ரம்புக்வெல 4/96, ரங்கன ஹேரத் 2/73

தமிழ் யூனியன் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 345/3 (83.2) தரங்க பரணவிதான 175, சசித்ர சேனநாயக்க 124*, கமிந்து கனிஷ்க 2/47

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது


SSC எதிர் சிலாபம் மேரியன்ஸ்

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், மேஜர் ப்ரீமியர் லீக் தொடரின் நடப்புச் சம்பியனாக காணப்பட்ட சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் அணி SSC அணியினரை 3 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.  

Photos: SSC v Chilaw Marians CC – Major Super 8s Tournament 2018/19

இப்போட்டியில், SSC அணியின் முதலாவது (374) மற்றும் இரண்டாவது (265/9d) இன்னிங்ஸ்களை அடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் 274 ஓட்டங்களை குவித்த சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 366 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி குறித்த வெற்றி இலக்கை 98 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 368 ஓட்டங்களுடன் அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 374 (101) சசித்ர சேனநாயக்க 89, சம்மு அஷான் 79, ஆகாஷ் சேனரத்ன 56, சாகர் பிரகாஷ் 4/138, புலின தரங்க 3/58

சிலபாம் மேரியன்ஸ் (முதல் இன்னிங்ஸ்) – 274 (73.3) திக்ஷில டி சில்வா 72, புலின தரங்க 51, சசித்ர சேனநாயக்க 6/73

SSC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 265/9d (69) கவிந்து குலசேகர 71, தசுன் ஷானக்க 68, நிபுன் தனன்ஞய 61, சாகர் பரேஷ் 5/107

சிலாபம் மேரியன்ஸ் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 368/7 (98) நிமேஷ் விமுக்தி 120, றிசித் உப்மால் 112*, சசித்ர சேனநாயக்க 3/100

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் 3 விக்கெட்டுகளால் வெற்றி


NCC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

தொடரின் வெற்றியாளராகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த கொழும்பு கிரிக்கெட் கழகம், எதிர்பார்ப்புக்களின் படியே NCC அணியினை இப்போட்டியில் 5 விக்கெட்டுகளால் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய NCC அணி அவர்களது முதல் இன்னிங்ஸில் 411 ஓட்டங்கள் குவித்தது. தொடர்ந்து கொழும்பு கிரிக்கெட் கழக அணியினர் தங்களது முதல் இன்னிங்ஸில் 427 ஓட்டங்கள் குவித்து சிறிய முன்னிலை ஒன்றினை (16) பெற்றுக் கொண்டனர்.

Photos: CCC v NCC | Major Super 8s Tournament 2018/19

இதனை அடுத்து இரண்டாம் இன்னிங்ஸில் பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு கிரிக்கெட் கழகம் 305 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 290 ஓட்டங்களை நிர்ணயம் செய்தது.

இந்த வெற்றி இலக்கை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய கொழும்பு கிரிக்கெட் கழகம் மினோத் பானுக்க (85) மற்றும் அஷான் பிரியன்ஞன் (60*) ஆகியோர் பெற்ற அரைச்சதங்களோடு குறித்த வெற்றி இலக்கினை 57.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அடைந்தது.  

பந்துவீச்சில் NCC அணிக்காக சரங்க ராஜகுரு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி போராடிய போதிலும் அவரினால் கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் வெற்றியினை தடுக்க முடியவில்லை.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 411 (104.3) மஹேல உடவத்த 162, பெதும் நிஸ்ஸங்க 119, வனிந்து ஹஸரங்க 4/63, அஷான் பிரியன்ஜன் 2/52

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 427 (98.3) ரொன் சந்திரகுப்தா 118, மினோத் பானுக்க 104, அஷான் பிரியன்ஜன் 51, சத்துரங்க டி சில்வா 5/104, அசித பெர்னாந்து 3/71

NCC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 305 (73.4) சத்துரங்க டி சில்வா 114, பெதும் நிஸ்ஸங்க 70, சரங்க ராஜகுரு 59*, வனிந்து ஹஸரங்க 6/80

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 290/5 (57.3) மினோத் பானுக்க 85, அஷான் பிரியன்ஞன் 60*, சரங்க ராஜகுரு 4/58

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<