முக்கிய துடுப்பாட்ட வீரரினை இழக்கும் மேற்கிந்திய தீவுகள்??

70
Brandon King

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான பிரண்டன் கிங் 2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> T20I போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய எஸ்தோனிய வீரர்

மேற்கிந்திய தீவுகள்இங்கிலாந்து அணிகள் விளையாடிய T20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 8 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிரடி ஆரம்பம் ஒன்றினை வழங்கியிருந்த பிரண்டன் கிங், துடுப்பாட முன்னர் தசை உபாதை காரணமாக ஆட்டமிழக்க முன்னரே மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தார் 

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தினை அடுத்து இங்கிலாந்து துடுப்பாடிய போது பிரண்டன் கிங்கிற்குப் பதிலாக மேலதிக வீரரினை களத்தடுப்பிற்கு உபயோகம் செய்திருந்தது.   

அதேநேரம் பிரண்டன் கிங்கிற்கு ஏற்பட்ட தசை உபாதை குணமடைய சுமார் 10 நாட்கள் வரை செல்லும் என்பதனாலேயே அவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகின்றது

மேற்கிந்திய தீவுகள் அணியின் T20 உலகக் கிண்ண குழாத்தில் அன்ட்ரூ பிளச்சர், கைல் மயேர்ஸ், பேபியன் அலன், ஹேய்டன் வால்ஸ் ஜூனியர் மற்றும் மெதிவ் போர்டே ஆகியோர் மேலதிக வீரர்களாக காணப்படும் நிலையில் இவர்களில் ஒருவர் பிரண்டன் கிங் இணை பிரதியீடு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<