தனது முதல் சம்பளம் தொடர்பில் மனம் திறந்த புவ்னேஸ்வர் குமார்

439
(Photo by Dibyangshu SARKAR / AFP)

புவ்னேவ்ஸவர் குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னிலை வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வருகின்றார். தற்போது, இந்திய கிரிக்கெட் அணிக்காக வழமையாக போட்டிகளில் ஆடும் புவ்னேஸ்வர் குமார் ஆண்டுதோறும் இந்திய நாணயப்படி 5 கோடி ரூபாய்கள் (இலங்கை நாணயப்படி 12.3 கோடி) வரையில் சம்பாதிப்பதாக கூறப்படுகின்றது.

கிரிக்கெட் பயிற்சிகளை மீண்டும் ஆரம்பித்துள்ள நியூசிலாந்து

நிலைமைகள் இவ்வாறு இருக்க, புவ்னேஸ்வர் குமார் தான் முதல்முறையாகப் பெற்றுகொண்ட சம்பளம் தொடர்பிலும் மனம் திறந்துள்ளார்.

அந்தவகையில், தனது முதல் சம்பளம் பற்றி டுவிட்டர் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு  பதில் அளித்த அவர் அது வெறும் 3,000 ரூபாய் தான் என்றார்.

“அது 3,000 ரூபாயாக இருந்தது. நான் அதில் பொருட்கள் கொள்வனவு செய்ததோடு, அதனை சேமிக்கவும் செய்திருந்தேன்.” என புவ்னேஸ்வர் குமார் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 2012ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது அறிமுகம் பெற்ற புவ்னேஸ்வர் குமார் தனது கன்னிப் போட்டியில் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார். இதேநேரம், புவ்னேஸ்வர் குமார் மாத்திரமே ராஞ்சிக் கிண்ணத் தொடரில் இந்தியாவின் துடுப்பாட்ட ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரை ஓட்டம் எதுவுமின்றி ஆட்டமிழக்க வைத்த பந்துவீச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BCCI யின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஹேமங் அமின்

இதேநேரம், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன் கிண்ணத் தொடரினை இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றிய புவ்னேஸ்வர் குமார், தான் உபாதைக்கு ஆளாக முன்னர் கடைசியாக இந்திய அணிக்கு 2019ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் நடைபெற்ற T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<