அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் திடீரென விலகிய பென் ஸ்டோக்ஸ்

England Cricket

371
Ben Stokes

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்தும் விலகியிருக்கவுள்ளதாக திடீரென அறிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. குறித்த டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

>> “T20I பந்துவீச்சு தரவரிசையில் வனிந்து விரைவில் முதலிடம் பிடிப்பார்”- ஷானக

எனினும், தற்போதைய சூழ்நிலையில் அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்தும், சிறிது காலத்துக்கு விலகியிருக்வுள்ளதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக பென் ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடமாட்டார் என்பதுடன், எவ்வளவு காலம் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருப்பார் என அறிவிக்கவில்லை.

பென் ஸ்டோக்ஸின் விரலில் ஏற்பட்டுள்ள உபாதை குணமடைவதற்காகவும், உளவியல் ரீதியாக புத்துணர்ச்சியை பெற்றுக்கொள்வதற்காகவும், இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் அஷ்லி கில்ஸ், “பென் ஸ்டோக்ஸ் அவருக்கு எவ்வளவு நீண்ட நாள் ஓய்வுவேண்டுமோ அதனை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், அவர் மீண்டும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு திரும்புவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

பென் ஸ்டோக்ஸ் நீண்ட காலமாக உபாதையுடன் இருந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20I தொடரில் இங்கிலாந்து அணியின் தலைவராக செயற்பட்டிருந்தார்.

சுற்றுலா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<