இந்திய வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் அறிவிப்பு!

Indian Cricket

51
Indian Cricket

இந்திய கிரிக்கெட் அணியின் 2024 – 2025 ஆண்டு பருவகாலத்துக்கான வீரர்கள் ஒப்பந்த விபரங்களை இந்திய கிரிக்கெட் சபை (BCCI) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

வீரர்களுக்கான ஒப்பந்தம் நான்கு பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிரிவு A+, A, B மற்றும் C என வீரர்களுக்கு ஒப்பந்தம் வகுக்கப்பட்டுள்ளது. 

>>இலங்கை A கிரிக்கெட் அணிக்கு மூன்றாவது தொடர் வெற்றி<<

A+ ஒப்பந்தத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

A பிரிவில் மொஹமட் சிராஜ், கே.எல்.ராஹுல், சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, மொஹமட் சமி, ரிஷப் பண்ட் ஆகியோரும், B பிரிவில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல், யஸஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சிரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இறுதியாக C பிரிவு ஒப்பந்தத்தில் ரிங்கு சிங், ரவி பிஸ்னோய், அர்ஷ்டீப் சிங், சர்பராஸ் கான், ஆகாஸ் டீப், திலக் வர்மா, வொசிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி, ருதுராஜ் கைக்வாட், முகேஷ் குமார், ரஜத் பட்டிதார், இசான் கிஷன், சிவம் டுபே, சஞ்சு சம்சன், துருவ் ஜூரல், அபிஷேக் ஷர்மா மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 

>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<