இலங்கை A கிரிக்கெட் அணிக்கு மூன்றாவது தொடர் வெற்றி

63

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற முக்கோண ஒருநாள் தொடரில் இன்று (19) இலங்கை A அணியானது அயர்லாந்து A அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது. 

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை A அணியானது இந்த முக்கோண ஒருநாள் தொடரில் தம்முடைய மூன்றாவது தொடர் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை, ஆப்கான் மற்றும் அயர்லாந்து  ஆகியவற்றின் A கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் முக்கோண ஒருநாள் தொடர் நடைபெற்று வருகின்றது 

இந்த ஒருநாள் தொடரின் தாம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை தொடரின் நான்காவது போட்டியில் அயர்லாந்து A கிரிக்கெட் அணியினை அபுதாபி நகரில் வைத்து எதிர் கொண்டது 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து A வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். இதன்படி முதலில் துடுப்பாடிய அயர்லாந்து  A அணியானது 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டது 

அயர்லாந்து  A அணியின் துடுப்பாட்டம் சார்பில் கிறிஸ்டோபர் டி பிரெய்டாஸ் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்கள் எடுத்தார். மோர்கன் டொப்பிங் 45 ஓட்டங்களைப் பெற்றார் 

இலங்கை A கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளரான டில்சான் மதுசங்க 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற, சுழல் வீரரான துஷான் ஹேமன்த 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

பங்களாதேஷ் உடன் ஆடும் இலங்கை U19 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 193 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை A அணியானது லசித் குரூஸ்புள்ள மற்றும் சதீர சமரவிக்ரம மற்றும் லஹிரு உதார ஆகியோரது அதிரடியோடு 27.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றி இலக்கினை 193 ஓட்டங்களுடன் அடைந்தது. 

இலங்கை A தரப்பின் வெற்றியினை உறுதி செய்த லசித் குரூஸ்புள்ள வெறும் 33 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காது 47 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுக்க லஹிரு உதார 47 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் 

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை A அணிக்காக சிறப்பாக பந்துவீசிய டில்சான் மதுசங்க தெரிவானார் 

போட்டியின் சுருக்கம் 

>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<