லுவிஸ் சுவாரஸின் இரண்டு கோல்கள் மூலம் செவில்லா அணியை அபாரமாக வென்ற பார்சிலோனா அணி கோபா டெல் ரே கிண்ண கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக நான்காவது முறையாகவும் சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

ஆர்செனல் கழகத்தின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகும் ஏர்சின் வெங்கர்

ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டியின் முதல் பாதியிலேயே கோல் புகுத்துவதை தொடங்கிய பார்சிலேனா முன்கள வீரர் சுவாரஸ் முதல் பாதியில் இரண்டு கோல்களை போட்டதன் மூலம், அவ்வணி 3-0 என முன்னிலை பெற்றது.

இதன்போது லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவுக்கு இரண்டாவது கோலை போட சுவாரஸ் 40ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் புகுத்தினார்.

முதல் பாதி:   பார்சிலேனா 3 – 0 செவில்லா

இதனைத் தொடர்ந்து ஆரம்பமான இரண்டாவது பாதி ஆட்டத்தில் அன்டெரஸ் இனியஸ்டா பாரிசிலோனாவுக்காக நான்காவது கோலைப் போட்டதோடு 69ஆவது நிமிடத்தில் கொடிஹோ பெனால்டி கோல் ஒன்றையும் போட பார்சிலோன 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதன்படி கடந்த மே மாதம் எர்னஸ்டோ வல்வெர்டே முகாமையாளர் பொறுப்பை ஏற்றதன் பின்னர் பார்சிலோனா அணி வெல்லும் முதல் கிண்ணம் இதுவாகும்.

முழு நேரம்: பார்சிலேனா 5 – 0 செவில்லா

அட்லெடிகோ மெட்ரிட் அணியை வீழ்த்தி கோபா டெல் ரே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய செவில்லா அணி, இறுதிப் போட்டியில் மிக பலவீனமான ஆட்டம் ஒன்றையே வெளிப்படுத்தியது.

இவ்வாரம் ஆரம்பமாகும் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடர்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால்…

இந்த வெற்றி பார்சிலோனா அணிக்கு சம்பியன்ஸ் லீக்கில் இத்தாலியின் ரோமா அணியிடம் பெற்ற தோல்விக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த இரண்டு கட்டங்கள் கொண்ட காலிறுதியில் பார்சிலோன முதல் காலிறுதியில் ரோமா அணிக்கு எதிராக 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தபோதும் இரண்டாவது காலிறுதியில் 3-0 என அதிர்ச்சித் தோல்வி கண்டு அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது. 

பார்சிலோனா அணி கடந்த 2015 தொடக்கம் கோபா டெல் ரே கிண்ணத்தை வென்று வருவதோடு ஸ்பெயினின் குறித்த முக்கிய தொடரில் சம்பியன் பட்டம் வெல்வது இது 30ஆவது தடவையாகும்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க