Home Tamil த்ரில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரினை சமநிலைப்படுத்திய பங்களாதேஷ்

த்ரில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரினை சமநிலைப்படுத்திய பங்களாதேஷ்

Bangladesh tour of Sri Lanka 2025

63

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில், பங்களாதேஷ் 16 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெற்றுள்ளதோடு தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது. 

>> 2ஆவது ஒருநாள் போட்டியை தவறவிடும் பங்களாதேஷ் பயிற்சியாளர்

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் சனிக்கிழமை (05) நடைபெற்று முடிந்த இந்தப் போட்டியில் முதல் போட்டி போன்று பிந்திய நேரங்களில் மைதானம் சுழலுக்கு சாதகமாக காணப்படும் என்பதனால் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் இளம் தலைவர் மெஹிதி ஹஸன் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார் 

இதன்படி முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்காக முதல் ஒருநாள் போட்டியில் ஏமாற்றம் வழங்கிய அறிமுக வீரர் பார்வேஸ் ஹொசைன் அசத்தினார். 3 சிக்ஸர்கள் 6 பௌண்டரிகள் என தனது கன்னி அரைச்சதத்துடன் அவர் 69 பந்துகளை முகம் கொடுத்து 67 ஓட்டங்கள் பெற்றார் 

மத்திய வரிசையில் பார்வேஸ் ஹொசைனிற்கு கைகொடுத்த தவ்ஹீத் ரிதோய் தன்னுடைய 8ஆவது அரைச்சதத்துடன் 51 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அவர் இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் அரைச்சதம் பெற்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது 

பங்களாதேஷின் ஏனைய வீரர்களில் தன்சிம் ஹஸன் தவிர ரிதோய், பார்வேஸ் ஆகியோர் இட்ட அடித்தளங்களை சிறப்பாக கட்டியமைக்காத நிலையில் அவ்வணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. தன்சிம் ஹஸன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் பெற்றார். 

>> அபார வெற்றியுடன் ஒருநாள் தொடரில் முன்னிலை அடைந்த இலங்கை

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் அசித பெர்னாண்டோ 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுக்களுக்கு சொந்தக்காரனாக மாறினார் 

பின்னர் சுழலுக்கு சாதகமான பிரேமதாச ஆடுகளத்தில் இலங்கை போட்டியின் வெற்றி இலக்கான 249 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய ஆடத் தொடங்கியது. முதல் போட்டி போன்று இப்போட்டியிலும் இலங்கையின் ஆரம்ப வீரர்களான பெதும் நிஸ்ஸங்க, நிஷான் மதுஷ்க ஏமாற்றினார் 

ஆனால் குசல் மெண்டிஸ் இந்தப் போட்டியிலும் சிறப்பாக ஆடினார். முதல் போட்டி போன்று சரிவில் இருந்த இலங்கை அணியினை பொறுப்பாக ஆடி மீட்ட அவர் தொடர்ந்து மூன்று நான்கு ஓட்டங்களை விளாசி வெறும் 20 பந்துகளில் அரைச்சதம் விளாசினார். மெண்டிஸின் அரைச்சதத்தோடு இலங்கை போட்டியில் இலங்கை முன்னேறிய போதிலும், தன்வீர் இஸ்லாமின் சுழல் பங்களாதேஷிற்கு கைகொடுக்கத் தொடங்கியது 

குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் மற்றும் துனித் வெல்லாலகே என இலங்கை அணியின் நம்பிக்கை தரும் வீரர்கள் தன்வீரின் விக்கெட் வேட்டைக்கு இரையாகினர். இதில் குசல் மெண்டிஸ் 31 பந்துகளில் 9 பௌண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 56 ஓட்டங்கள் பெற்றார். முக்கிய வீரர்களின் விக்கெட்டுக்களை அடுத்து இலங்கை அணியானது ஒரு கட்டத்தில் 170 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது 

எனினும் இந்த தருணத்தில் களத்தில் காணப்பட்ட ஜனித் லியனகே இலங்கை அணிக்காக போராட்டம் காண்பித்து, பின்வரிசை வீரரான துஷ்மன்த சமீரவுடன் இணைந்து ஒன்பதாம் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கினார். இந்த இணைப்பாட்டம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பொன்றினை இலங்கை அணிக்கு வழங்கியது 

எனினும் துரதிஷ்டவசமாக ஜனித் லியனகேவின் விக்கெட் முஸ்தபிசுர் ரஹ்மானிடம் பந்துவீச்சில் பறிபோக இறுதியில் இலங்கை அணியானது இறுதியில் 48.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வி அடைந்தது 

இலங்கை அணியின் சார்பில் ஜனித் லியனகே 85 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்கள் பெற்றார். பங்களாதேஷ் பந்துவீச்சில் அதன் வெற்றியினை உறுதி செய்த தன்வீர் இஸ்லாம் 39 ஓட்டங்களில் 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, தன்சிம் ஹஸன் 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினார். போட்டியின் ஆட்டநாயகன் விருது தன்வீர் இஸ்லாமிற்கு வழங்கப்பட்டது.    

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
232/10 (48.5)

Bangladesh
248/10 (45.5)

Batsmen R B 4s 6s SR
Parvez Hossain Emon b Wanindu Hasaranga 67 69 6 3 97.10
Tanzid Hasan c Kusal Mendis b Asitha Fernando 7 11 0 0 63.64
Najmul Hossain Shanto c Maheesh Theekshana b Charith Asalanka 14 19 2 0 73.68
Towhid Hridoy run out (Nishan Madushka) 51 69 2 0 73.91
Mehidy Hasan Miraz c Pathum Nissanka b Nishan Madushka 9 10 1 0 90.00
Shamim Hossain c Janith Liyanage  b Asitha Fernando 22 23 2 1 95.65
Jaker Ali lbw b Asitha Fernando 24 40 2 0 60.00
Tanzim Hasan Sakib not out 33 21 2 2 157.14
Hasan Mahmud c Nishan Madushka b Asitha Fernando 0 2 0 0 0.00
Tanvir Islam lbw b Wanindu Hasaranga 4 5 1 0 80.00
Mustafizur Rahman lbw b Wanindu Hasaranga 0 7 0 0 0.00


Extras 17 (b 8 , lb 1 , nb 1, w 7, pen 0)
Total 248/10 (45.5 Overs, RR: 5.41)
Bowling O M R W Econ
Asitha Fernando 9 0 35 4 3.89
Maheesh Theekshana 7 0 32 0 4.57
Dushmantha Chameera 7 0 37 1 5.29
Charith Asalanka 3 0 24 1 8.00
Dunith Wellalage 8 0 32 0 4.00
Wanindu Hasaranga 9.5 1 60 3 6.32
Kamindu Mendis 2 0 19 0 9.50


Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Towhid Hridoy b Tanvir Islam 17 25 3 0 68.00
Pathum Nissanka lbw b Tanzim Hasan Sakib 5 8 1 0 62.50
Kusal Mendis lbw b Tanvir Islam 56 31 9 1 180.65
Kamindu Mendis c Mehidy Hasan Miraz b Tanvir Islam 33 51 2 0 64.71
Charith Asalanka c Tanvir Islam b Shamim Hossain 6 17 1 0 35.29
Janith Liyanage  c & b Mustafizur Rahman 78 85 7 2 91.76
Dunith Wellalage c Jaker Ali b Tanvir Islam 1 1 0 0 100.00
Wanindu Hasaranga c Tanzim Hasan Sakib b Mehidy Hasan Miraz 13 16 1 0 81.25
Maheesh Theekshana c Rishad Hossain b Tanvir Islam 2 12 0 0 16.67
Dushmantha Chameera b Tanzim Hasan Sakib 13 31 1 0 41.94
Asitha Fernando not out 3 7 0 0 42.86


Extras 5 (b 0 , lb 1 , nb 0, w 4, pen 0)
Total 232/10 (48.5 Overs, RR: 4.75)
Bowling O M R W Econ
Hasan Mahmud 7 0 43 0 6.14
Tanzim Hasan Sakib 4.5 0 34 2 7.56
Tanvir Islam 10 2 39 5 3.90
Mustafizur Rahman 8 0 56 1 7.00
Mehidy Hasan Miraz 10 0 37 1 3.70
Shamim Hossain 9 1 22 1 2.44



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<