பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தலைவர் பதவியை பாபர் அஷாம் இராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த பாபர் அஷாம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் அணியின் மோசமான பிரகாசிப்புகள் காரணமாக பதவியிலிருந்து விலகியிருந்தார்.
>>இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை வெற்றி
எனினும் சுமார் 3 மாத காலப்பகுதிக்கு பின்னர் மீண்டும் அணியின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தினார்.
குறித்த இந்த தொடரில் அமெரிக்க அணிக்கு எதிராக அதிர்ச்சித்தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிராகவும் தோல்வியடைந்து முதல் சுற்றுடன் வெளியேறியது.
இறுதியாக பாகிஸ்தான் டெஸ்ட் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்து பல விமர்சனங்களுக்கு முகங்கொடுத்திருந்தது. எனவே தன்னுடைய துடுப்பாட்டத்தில் முழுமையாக கவனம் செலுத்துவதற்காக தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாபர் அஷாம் அறிவித்துள்ளார்.
பாபர் அஷாம் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<