இலங்கை அணியை தடுமாறச் செய்துள்ள ஆஸியின் துடுப்பாட்டம்

518

அவுஸ்திரேலியா – சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ட்ராவிஷ் ஹெட் மற்றும் ஜோ பேர்ன்ஸ் ஆகியோரின் சதங்களின் உதவியுடன் அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 384 ஓட்டங்களை குவித்துள்ளது. போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை அணி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய போதும் பின்னர் நெருக்கடியை சந்தித்து வருகின்றது.

தொடரை தீர்மானிக்கும் மோதலில் இலங்கை ஆஸியை எவ்வாறு எதிர்கொள்ளும்?

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான …

கென்பெரா – மனூகா ஓவல் மைதானத்தின் முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில், இரு அணிகளும் களம் கண்ட நிலையில், மாற்றங்களுடன் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்திருந்தது. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் உபாதை காரணமாக வெளியேறியதால், கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் சாமிக கருணாரத்ன ஆகிய அனுபவமற்ற பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி களமிறங்கியது. இதில் சாமிக கருணாரத்ன சர்வதேச டெஸ்ட் அறிமுகத்தை இன்று பெற்றிருந்தார்.

அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாட தீர்மானிக்க, அனுபவமற்ற பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. குறிப்பாக நீண்ட நாட்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பிய விஷ்வ பெர்னாண்டோ, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்கஸ் ஹெரிஸ் (11) மற்றும் உஸ்மான் கவாஜா (0) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்ற, அறிமுக வீரர் சாமிக கருணாரத்ன மெர்னஸ் லெபுச்செங்கின் (06) விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.

இவர்கள் இருவரின் நெருக்கடியான பந்து வீச்சுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை வெறும் 28 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறி வந்தது. எனினும், முதல் போட்டியில் அரைச்சதம் கடந்து அணியின் துடுப்பாட்டத்துக்கு பலம் சேர்த்திருந்த ட்ராவிஷ் ஹெட், ஜோ பேர்ன்ஸுடன் இணைந்து இலங்கை அணியின் பந்துவீச்சை தடுமாற்றத்துக்கு உள்ளாக்கினார். இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்காமல் துடுப்பெடுத்தாடிய இவர்களின் ஆட்டத்தின் மூலம், அவுஸ்திரேலிய அணி மதிய போசன இடைவேளையின் போது, 3 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து ஆரம்பித்த போட்டியில் இலங்கை அணிக்கு மேலும் நெருக்கடிகளை கொடுக்கும் விதமாக இவர்களின் ஆட்டம் அமைந்திருந்தது. இதன்படி ட்ராவிஷ் ஹெட் அரைச் சதம் கடக்க, இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களை பகிர்ந்தனர். அத்துடன், ஜோ பேர்ன்ஸும் தனது அரைச்சதத்தை பதிவுசெய்தார். அரைச் சதங்களின் பின்னர் இருவரும் வேகமாக ஓட்டங்களை பெற, அவுஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளை வரை மேலதிக விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் 220 ஓட்டங்களை பெற்றது. இதில், தனது கன்னி டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து, ட்ராவிஷ் ஹெட் 107 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

தொடரை தீர்மானிக்கும் மோதலில் இலங்கை ஆஸியை எவ்வாறு எதிர்கொள்ளும்?

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான….

இதன் பின்னர் ஆரம்பமாகிய இன்றைய ஆட்டத்தின் இறுதி பாதியில், இலங்கை அணிக்கு வாய்ப்புகள் பெறப்பட்ட போதும், கவனயீனமற்ற களத்தடுப்பின் மூலம் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்புகள் விட்டுக்கொடுக்கப்பட்டன. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள ஜோ பேர்ன்ஸ் தன்னுடைய 4வது சதத்தை பெற்றுக்கொண்டார். ஜோ பேர்ன்ஸ் மற்றும் ட்ராவிஷ் ஹெட் ஆகியோர் 4வது விக்கெட்டுக்காக 308 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, ட்ராவிஷ் ஹெட் 161 ஓட்டங்களுடன் விஷ்வ பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

எனினும், இன்றைய ஆட்டநேர இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஜோ பேர்ன்ஸ், டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய அதிகூடிய ஓட்டங்களுடன் (172) களத்தில் உள்ளார். இவருடன், குர்டிஸ் பெட்டர்சன் 25 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலிய அணி ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 384 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணியின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், சாமிக கருணாரத்ன ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளனர்.

போட்டி சுருக்கம்