இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் கமில் மிஷாரவின் சதத்துக்கு பதிலடி கொடுத்து சதம் விளாசிய சேம் பென்னிங்கின் அபார ஆட்டத்தால் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது.
இலங்கை இளையோர் அணியில் மீண்டும் மொஹமட் சமாஸ்
இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் மற்றும்…
அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒற்றை மூன்று நாள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பி. சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் இன்று (03) நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைவர் நிபுன் தனன்ஞய முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
Photos: Australia U19 Team Tour to Sri Lanka 2019 – 1st ODI
இதன்படி இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கு முன்வரிசை வீரர்களாக வந்த கமில் மிஷார மற்றும் நவோத் பரணவிதான ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 126 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர். இதில் நவோத் பரணவிதான 78 பந்துகளுக்கு 45 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மொஹமட் சமாஸ் 3 ஓட்டங்களுடன் தன்வீர் சங்காவின் பந்தில் ஆட்டமிழந்தார். எனினும், கமில் மிஷார மற்றும் அணித் தலைவர் நிபுன் தனன்ஞய ஆகியோர் தமது அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுச்சேர்த்தனர்.
இவர்களின் அதிரடியோடு இலங்கை இளையோர் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை குவித்தது.
குசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து…
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிரடியான முறையில் செயற்பட்ட கமில் மிஷார 157 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 123 ஓட்டங்களை விளாச, அணித் தலைவர் நிபுன் தனன்ஞய 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக செக் ஈவென்ஸ் மற்றும் ஜோஸ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 263 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சேம் பென்னிங் மற்றும் கொரி ஹன்டர் ஆகியோர் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்ததுடன், முதல் விக்கெட்டுக்காக 114 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து வலுச்சேர்த்தனர்.
இதன்போது, கொரி ஹன்டர் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இலங்கை வீரர்களுக்கு மிகவும் தேவையான முதல் விக்கெட்டை ரொஹான் சன்ஜய கைப்பற்றினார்.
இதன் பின்னர், அவுஸ்திரேலிய இளையோர் அணிக்கு சேம் பென்னிங் மற்றும் ஒலிவர் டேவிஸ் ஆகியோர் தமது அதிரடி மூலம் உதவ அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 47.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கினை அடைந்தது.
Video -ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 59
88 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில்…
அவுஸ்திரேலிய இளையோர் அணியின் துடுப்பாட்டத்தில் தமது அதிரடி மூலம் பங்களிப்பு செய்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சேம் பென்னிங் 94 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 14 பௌண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்களினையும், ஒலிவர் டேவிஸ் 44 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 50 ஓட்டங்களை ஆட்டமிழக்காதும் பெற்று வலுச்சேர்த்தனர்.
இதேநேரம், பந்துவீச்சில் இலங்கை சார்பாக ரொஹான் சன்ஜய, ரவீன் டி சில்வா மற்றும் நவோத் பரனவிதான ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இதன்படி, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1 – 0 என அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 05ஆம் திகதி பி. சரணவமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















