டேவிட் வோர்னரின் போராட்டம் வீண், தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா

86
ICC

தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின் இறுதி நேர அபாரத்தால் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தியுள்ளது. 

அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டி20 சர்வதேச போட்டி இன்று (23) போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. 

ஹெட்ரிக் விக்கெட் சாதனையுடன் அபார வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையில்…

முதல் போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி இரண்டாவது போட்டிக்காக எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளாத நிலையில் படுதோல்வியடைந்த தென்னாபிரிக்க அணி 3 மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டுவைன் பிரிடோரியஸ் மற்றும் அண்ரிச் நோட்ரியா ஆகியோர் அணிக்குள் கொண்டுவரப்பட ஜொன் ஜொன் ஸ்மட்ஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் அணியிலிருந்து தூக்கப்பட்டனர். 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் குயின்டன் டி கொக் மற்றும் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். 

குயின்டன் டி கொக் அதிரடியாக ஆட முதல் பவர்-பிளே ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 59 ஓட்டங்களை குவித்தது. இந்நிலையில் 7ஆவது ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த முன்னாள் அணித்தலைவர் பாப் டு ப்ளெஸிஸ் 15 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். 

மறுமுனையில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வந்த அணித்தலைவர் குயின்டன் டி கொக் 31 பந்துகளில் டி20 சர்வதேச அரங்கில் தனது 6ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்த நிலையில் 15ஆவது ஓவரில் 4 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் மொத்தமாக 70 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த ரைஸ் வென் டர் டைஸன் 2 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் மொத்தமாக 37 ஓட்டங்களை பெற்று 19ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 

இலங்கையிடம் வீழ்ந்த மேற்கிந்திய தீவுகளுக்கு ஐ.சி.சி அபராதம் விதிப்பு

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று (22) கொழும்பு…

ஆரம்பத்தில் முதல் பவர்-பிளே ஓவர்களில் கிடைத்த ஓட்டவீதம் பின்னர் கிடைக்காத காரணத்தினால் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆடுகளத்தில் டேவிட் மில்லர் 11 ஓட்டங்களுடனும், பைட் வென் பில்ஜொன் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்சன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பெட் கம்மிண்ஸ் மற்றும் அடம் ஸம்பா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தினர். 159 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு ஓரளவு சிறந்த ஆரம்பம் கிடைத்தது. 

ஐந்தாவது ஓவரில் அணித்தலைவர் ஆரேன் பிஞ்ச் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், முதல் பவர்-பிளே ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்களை குவித்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கிடையில் 50 ஓட்டங்கள் பகிரப்பட்டது. 

இவ்வேளையில் நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி இக்கட்டான நிலைக்கு உள்ளானது. தொடர்ந்து 18ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியது. 

இறுதி 2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் மீதமிருக்க அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்டன. மெத்யூ வேட் வந்த வேகத்திலேயே 18ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இறுதி ஓவரில் அஸ்டன் அகார் 5 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இறுதியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கியது. 

மறுமுனையில் டேவிட் வோர்னர் டி20 சர்வதேச அரங்கில் தனது 16ஆவது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாலும் அவர் 56 பந்துகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் லுங்கி ங்கிடி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அண்ரிச் நோட்ரியா, ககிஸோ ரபாடா, மற்றும் டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தினர். 

போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணித்தலைவர் குயின்டன் டி கொக் தெரிவானார். தென்னாபிரிக்க அணியின் இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி டி20 சர்வதேச போட்டி எதிர்வரும் புதன்கிழமை (26) கேப்டவுணில் நடைபெறவுள்ளது. 

இலங்கையுடனான டி20 சர்வதேச குழாமுக்கு திரும்பிய அண்ட்ரூ ரசல்

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள டி20 சர்வதேச தொடருக்கான மேற்கிந்திய தீவுகள்…

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா – 158/4 (20) – குயின்டன் டி கொக் 70 (47), ரைஸ் வென் டர் டைஸன் 37 (26), கேன் ரிச்சர்ட்சன் 2/21 (4), பெட் கம்மிண்ஸ் 1/31 (4)

அவுஸ்திரேலியா – 146/6 (20) டேவிட் வோர்னர் 67* (56), ஸ்டீவ் ஸ்மித் 29 (26), லுங்கி ங்கிடி 3/41 (4), அண்ரிச் நோட்ரியா 1/24 (4)

முடிவு – தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<