இலங்கையின் A கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே ஓருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடர்களில் ஆடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>மீள திருத்தப்பட்ட உள்ளூர் T20 போட்டி அட்டவணை அறிவிப்பு<<
இலங்கையின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மொத்தம் 3 ஒருநாள் போட்டிகளும், 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகும் இந்த தொடரில் முதலாவதாக ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகின்றது.
அதேநேரம் தொடரின் போட்டிகள் அனைத்தும் டார்வின் நகரில் அமைந்திருக்கும் இரண்டு மைதானங்களில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
போட்டி அட்டவணை
ஜூலை 4 – முதல் 50 ஓவர் – போட்டி (பகலிரவு ஆட்டம்) – Marrara Cricket Ground
ஜூலை 6 – இரண்டாது 50 ஓவர் – போட்டி – Marrara Cricket Ground
ஜூலை 9 – மூன்றாவது 50 ஓவர் – போட்டி – Marrara Cricket Ground
ஜூலை 13–16 – முதல் நான்கு நாட்கள் போட்டி – Marrara Stadium
ஜூலை 20–23 – இரண்டாவது நான்கு நாட்கள் போட்டி – Marrara Cricket Ground
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<