ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் அடுத்தச்சுற்றில் இலங்கை

Asian Netball Championship 2022

248

சிங்கபூரில் நடைபெற்றுவரும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற பிலிப்பைன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

குழு Aயிற்கான தங்களுடைய முதல் போட்டியில் ஜப்பான் அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, பிலிப்பைன்ஸ் அணியை 99-37 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி A குழுவில் முதலிடத்தை பிடித்துக்கொண்டதுடன், அடுத்தச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

>> இந்தியாவை இலகுவாக வீழ்த்திய இலங்கை வலைப்பந்தாட்ட அணி

போட்டியின் முதல் கால்பகுதியில் 27-04 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்ததுடன், இரண்டாவது கால்பகுதியில் 25-12, மூன்றாவது கால்பகுதியில் 27-09 மற்றும் நான்காவது கால்பகுதியில் 20-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப்பெற்று வெற்றியை பதிவுசெய்தது.

இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளதுடன், முதல் போட்டியில் செவ்வாய்க்கிழமை (06) மலேசிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் நடைபெற்ற ஏனைய இரண்டு போட்டிகளில் ஜப்பான் அணியை எதிர்கொண்ட மாலைத்தீவுகள் அணி 56-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றதுடன், சீன தைபே அணியை எதிர்கொண்ட மலேசியா அணி 82-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

அதன்படி இலங்கை, மலேசியா, சிங்கபூர் மற்றும் ஹொங் கொங் அணிகள் அடுத்தச்சுற்றில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி முடிவுகள்

  • இலங்கை 100 – 30 பிலிப்பைன்ஸ்
  • மாலைத்தீவுகள் அணி 56 – 21 ஜப்பான்
  • மலேசியா 82 – 25 சீன தைபே

திங்கட்கிழமை (04) நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்

  • இந்தியா 41 – 45 பிலிப்பபைன்ஸ்
  • சீன தைபே 34 – 38 புரூனே
  • மாலைத்தீவுகள் 10 – 96 சிங்கபூர்
  • தாய்லாந்து 29 – 56 ஹொங் கொங்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<