பங்களாதேஷ் துடுப்பாட்டப் பயிற்சியாளராக அஷ்ரபுல் நியமனம்

55

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்டவீரருமான மொஹமட் அஷ்ரபுல், அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரைசிங் ஸ்டார்ஸ் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) திங்கட்கிழமை (03) நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் அஷ்ரபுலின் புதிய நியமனம் குறித்த இந்த முடிவை அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அஷ்ரபுல் தற்காலிக நியமனம் ஒன்றின் அடிப்படையில் இந்த தொடருக்கான சிறப்பு துடுப்பாட்டப் பயிற்சியாளராக செயற்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டிற்காக 2014ஆம் ஆண்டு தடைபெற்ற அஷ்ரபுல்அதன் பின்னர் முதன்முறையாக தேசிய அணியுடன் இணையும் முதல் சந்தர்ப்பமாகவும் அவரது துடுப்பாட்டப் பயிற்சியாளர் பிரவேசம் மாறியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

அஷ்ரபுலின் நியமனம் குறித்துப் பேசிய பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாக இயக்குனரும்முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான அப்துர் ரஷாக்அஷ்ரபுலிடம் அனுபவம் உள்ளது. அவர் ஏற்கனவே பயிற்சியாளர் கற்கைநெறிகளையும் பூர்த்தி செய்து சிறந்த பயிற்சியாளர் அனுபவத்துடன் காணப்படுகின்றார்.” என்று குறிப்பிட்டிருந்தார். 

இதேவேளை அஷ்ரபுலின் நியமனத்திற்கு முன்னர் பங்களாதேஷ் வீரர்களின் துடுப்பாட்ட விடயங்களை கவனித்து வந்த உதவிப் பயிற்சியாளரான இருந்த மொஹமட் சலாஹுத்தீன் அவரது பொறுப்புக்களில் இருந்து நீக்கப்படவில்லை என்றும்அவர் தொடர்ந்து அணியின் பயிற்சியாளர் குழாத்தில் உதவிப் பயிற்சியாளராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

அயர்லாந்து அணி இந்த மாதம் பங்களாaதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளதோடுஇதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் இம்மாதம் 11ஆம் திகதி சில்லேட்டில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<