அயர்லாந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கிரஹம் போர்ட்

364

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளின் முன்னால் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் அயர்லாந்து அணியின் புதிய பயிற்றுவிப்பளாராக நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஜோன் பிரேஸ்வெல்லின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அயர்லாந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக கிரஹம் போர்ட் செயற்படவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரை அவர் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றவுள்ளார்.

இது பற்றி போர்ட் கருத்துத் தெரிவிக்கையில் “அயர்லாந்து கிரிக்கெட் அணியுடனான எனது பயணத்தை நினைத்து மிகவும் சந்தோசமடைகின்றேன். எனது அறிவும் அனுபவமும் அயர்லாந்து கிரிக்கெட்டில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் “நான் எப்போதும் ஒழுக்கமான, சிறந்த தன்மையுள்ள தோழமையான நபர்களுடன் வேலை செய்வதையே விரும்புகிறேன். அத்தகைய அனைத்தும் அயர்லாந்து வீரர்களிடம் உள்ளது. எனது சகல முயற்சியும் விளையாட்டு வீரர்களின் திறமைகளை முன்னேற்றி மிகச்சிறந்த விளையாட்டை விளையாட காரணமாக இருக்கும் என நம்புகின்றேன்” எனத் தெரிவித்தார்.

கடந்த ஜுன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியமை, களத்தடுப்பு தொடர்பிலான விமர்சனங்கள், மாலிங்க -விளையாட்டுத்துறை அமைச்சர் இடையிலான மோதல் என்பவற்றுக்கு இடையில், ஜிம்பாப்வே அணியுடனான தொடர் ஆரம்பமாவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன் இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய கிரஹம் போர்ட் இலங்கையை விட்டு திடீரென வெளியேறியமையானது இலங்கை கிரிக்கெட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான 56 வயதுடைய கிரஹம் போர்ட், கடந்த வருடம் இரண்டாவது முறையாகவும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். எதிர்வரும் 2019ஆம் அண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் முடிவுறும் வரை அவர் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், 15 மாதங்களைக் கொண்ட குறுகிய காலப்பகுதியில் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக இராஜினாமாச் செய்வதாக அறிவித்து அவர் தென்னாபிரிக்கா சென்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஆலோசகராக இங்கிலாந்தவர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஆலோசகராக இங்கிலாந்தவர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய உடற்தகுதி ஆலோசகராக இங்கிலாந்தின் சசெக்ஸ் கிரிக்கெட் கழகத்தின் உடற்தகுதி மற்றும் மறுசீரமைப்பு ஆலோசகரான ரொப் சேவ் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் பிரபல போர்ஸ்மட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி விஞ்ஞான பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள அவர், 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் சசெக்ஸ் அணியின் உடற்தகுதி ஆலோசகராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்கள் முக்கியமான போட்டித் தொடர்களின் போது உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

பயிற்றுவிப்பாளராக 25 வருடகால அனுபவத்தைக் கொண்டுள்ள கிரஹம் போர்ட், முன்னதாக 2012 முதல் 2014ஆம் ஆண்டு வரை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக  செயற்பட்டதுடன், அதில் அவர் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றதுடன், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை சம்பியனாக்குவதற்கு முக்கிய காரணமாகவும் காணப்பட்டார்.

அதன்பிறகு இங்கிலாந்தின் சர்ரே அணியின் பயிற்றுவிப்பாளராக 2 வருடங்கள் ஒப்பந்தம்  செய்யப்பட்ட அவர் மீண்டும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். எனினும் முன்னதாக அவர் 1999 முதல் 2002ஆம் ஆண்டு வரை தென்னாபிரிக்க அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிரஹாம் போர்ட்டின் வருகை குறித்து அயர்லாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில் “கிரஹாம் போர்ட் போன்ற ஒருவர் எமது கிரிக்கெட்டில் இருப்பதை நினைத்து பெருமையாகவுள்ளது. அவருடன் சேர்ந்து வேலை செய்வதை எதிர்பார்த்தவர்களாக உள்ளோம். அவர் வீரர்களின் தனிப்பட்ட திறமை, அணியின் முகாமைத்துவம் மற்றும் அணயின் திறமை போன்றவற்றை கையாள்வதிலும் முன்னேற்றுவதிலும் திறமையானவர். கிரிக்கெட் உலகில் நன்மதிப்புடைய ஒருவரான போர்ட், அவரின் துணையுடன் உலகின் தலை சிறந்த அணிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் விளையாடக் கூடிய ஒரு அணியாக மாறுவோம்” என தெரிவித்தார்.