இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக அன்டன் ரொக்ஸ்

259
Getty Image

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க நாட்டவரான அன்டன் ரொக்ஸ் (Anton Roux) நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பினை இங்கிலாந்தின் நொட்டிங்ஹம்ஷெயர் கழகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் நொட்டிங்ஹம்ஷெயர் கிரிக்கெட் கழகத்தின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வந்த அன்டன் ரொக்ஸ், முன்னதாக நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், நியூசிலாந்து A அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றியிருந்தார்.

இரண்டாவது டெஸ்டில் பெதும் நிஸ்ஸங்க விளையாடுவதில் சந்தேகம்!

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைவது தொடர்பில் அன்டன் ரொக்ஸ் கருத்து தெரிவிக்கையில்,

”இலங்கை கிரிக்கெட் அணியுடன் பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பு ஒரு புதிய சவாலாகும். மேலும் இது எனது குடும்பத்தினருக்கும், எனக்கும் புதிய அனுபவத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பு. ஒவ்வொரு வீரரும், பயிற்சியாளரும் சிறந்து விளங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அத்தகைய பெருமைமிக்க கிரிக்கெட் அணியொன்றுக்கு சர்வதேச அரங்கில் போட்டியிட உதவ நான் காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.

அமெரிக்காவில் பிறந்து தென்னாபிரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுத்த 40 வயதான அன்டன் ரொக்ஸ், ஒரு சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் ஆவார். ஆனால் அவர் தென்னாபிரிக்காவுக்காக உள்ளுர் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் அந்த அணிக்காக விளையாடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<