இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகிய ஹசிம் அம்லா

4

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான குழாத்திலிருந்து தென்னாபிரிக்க அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா விலகியுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குசல் பெரேராவை ஒரு நாள் தொடரில் இழக்கும் இலங்கை அணி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட ……

ஹசிம் அம்லா தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து விலகியுள்ளார். அம்லாவின் தந்தை கடுமையான சுகயீனத்துக்கு முகங்கொடுத்துள்ளமையால் அவர் குழாத்திலிருந்து விலகுவதற்கு அனுமதி கோரியதாக தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் மொஹமட் மோசஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட முகாமையாளர், “இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதற்கு ஹசிம் அம்லா கோரிக்கை விடுத்திருந்தார். ஹசிம் அம்லா மற்றும் அவரது குடும்பம் இன்னலை சந்திக்கும்  தருணங்களில் எமது நிர்வாகம் மற்றும் வீரர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். வீரர்கள் என்றாலும் அவர்களின் குடும்பத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதனை நாம் அறிந்து வைத்துள்ளோம். இதன் காரணமாக அவர் அணியிலிருந்து விலகுவதற்கு நாம் அனுமதி அளித்துள்ளோம்” என்றார்.

ஹசிம் அம்லாவினை அணியிலிருந்து நீக்கியுள்ளதுடன், அவருக்கு பதிலாக ரீஷா ஹென்ரிக்ஸ் மீண்டும் அணிக்குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். ரீஷா ஹென்ரிக்ஸ் முதல் மூன்று போட்டிகளில் விளையாடியிருந்த போதும் அவர் பிரகாசிக்க தவறியிருந்தார். கடந்த மூன்று போட்டிகளிலும் அவர் மொத்தமாக 34 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.

ரீஷா ஹென்ரிக்ஸின் மீள்வருகை குறித்து முகாமையாளர் குறிப்பிடுகையில், “இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரீஷா ஹென்ரிக்ஸ் மற்றும் ஹசிம் அம்லா ஆகியோரை சுழற்சி முறையில் விளையாட வைப்பதற்கு நாம் திட்டமிட்டிருந்தோம். தற்போது ஹசிம் அம்லா விலகியுள்ள காரணத்தால் மீண்டும் ரீஷா ஹென்ரிக்ஸ் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்” என்றார்.

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 3-0 என கைப்பற்றியுள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று (13) பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

தென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கு …….

தென்னாபிரிக்க குழாம்

பாப் டு ப்ளெசிஸ் (தலைவர்), ரீஷா ஹென்ரிக்ஸ், குயிண்டன் டி கொக், ஜேபி டுமினி, இம்ரான் தாஹிர், எய்டன் மர்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, என்ரிச் நொர்டிஜே, எண்டில் பெஹெலுக்வாயோ, டவைன் ப்ரிட்டோரியஸ், காகிஸோ ரபாடா, டெப்ரைஷ் செம்ஷி, டேல் ஸ்டெய்ன், ரஸ்ஸி வென் டெர் டசன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<